September 25, 2021

பொன்னேரி அரசு மருத்துவமனையில் உயர் மருத்துவ உபகரண நிலையத்தை, அமைச்சர் மா.சு சுப்பிரமணியன் அவர்கள் திறந்து வைத்தார்…

1 min read
Spread the love

பொன்னேரியில் இயங்கி வரக்கூடிய அரசு மருத்துவமனையில் பொன்னேரி மற்றும் அதை சுற்றியுள்ள அனைத்து கிராம மக்களும், கும்மிடிப்பூண்டி தாலுகாவில் உள்ள கிராம மக்களும் சிகிச்சை பெற்று பயனடைந்து வருகின்றனர்.

இந்நிலையில் அந்த மருத்துவமனையில் ஸ்கேன் மற்றும் ரத்த பரிசோதனை இயந்திரங்கள், எக்ஸ்ரே எடுக்கக்கூடிய இந்திரங்கள் அனைத்தும் உயர்தரமான டிஜிட்டல் வடிவில் அமைக்க வேண்டிய திட்டமிடப்பட்டிருந்தது.

அதற்காக, பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகர் முயற்சி மேற்கொண்டதன் மூலமாக எண்ணூர் காமராஜர் துறைமுக நிர்வாகத்தின் சார்பில் பொன்னேரி அரசு மருத்துவமனையில் மிக உயரிய தரமான மருத்துவ உபகரணங்கள் 47 லட்சம் மதிப்பீட்டில் வழங்கப்பட்டது.

அந்த மருத்துவ உபகரணங்கள் நிலையத்தை மருத்துவம் மற்றும் நல்வாழ்வு துறை அமைச்சர் மா. சு சுப்பிரமணியன் அவர்கள் திறந்து வைத்தார். அப்போது, பால்வள துறை அமைச்சர் சா.மு நாசர், மாவட்ட ஆட்சி தலைவர் ஆல்பி ஜான் வர்கிஸ், மற்றும் பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகர், கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் டி.ஜே கோவிந்தராஜன், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் உமாமகேஸ்வரி, ஒன்றியக்குழு தலைவர் அத்திப்பட்டு ரவி மீஞ்சூர் ஒன்றிய செயலாளர் எம் எஸ் கே ரமேஷ் ராஜ், பொன்னேரி நகர செயலாளர் விஸ்வநாதன், மீஞ்சூர் நகரச் செயலாளர் மோகன்ராஜ் உட்பட பலர் உடன் இருந்தனர்.

செய்தியாளர் – சுந்தர்
நிழல் . இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed