September 16, 2021

கும்மிடிப்பூண்டி பகுதிகளில் சசிகலாவின் 67-வது பிறந்தநாளை முன்னிட்டு, கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடத்தி அன்னதானம் வழங்கப்பட்டது…

1 min read
Spread the love

இன்று திருவள்ளூர் கிழக்கு அம்மா முன்னேற்றக் கழகம் சார்பில் 67 வது பிறந்த நாள் காணும் சசிகலா அவர்கள் இன்னும் பல்லாண்டு காலம் வாழ வேண்டும் என்று திருவள்ளூர் கிழக்கு மாவட்ட செயலாளா் சங்கர்ராஐா தலைமையில், வீரபத்ர கோவிலில் சசிகலா பிறந்த நாளை முன்னிட்டு, அபிஷேகங்களும், பூஜைகளும் நடைபெற்று பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. அதில், கும்முடிபூண்டி ஒன்றிய செயலாளர் சுரேஷ், ஆரணி தன்ராஜ் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

அதே போல், மாதர்பக்கத்தில் அ மா மு க கழகப் பொதுச்செயலாளர் டிடிவி அவர்களின் அறிவுறுத்தலின்படி கண்ணன்கோட்டை முனிரத்தினம் ஏற்பாட்டில், சசிகலா அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு மாபெரும் அன்னதான நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் சிறப்பு அழைப்பாளராக முன்னாள் அமைச்சர் செந்தமிழன், கிழக்கு மாவட்ட கழக செயலாளர் பி.வி .சங்கர் ராஜா கலந்துகொண்டு அன்னதானம் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஒன்றிய பேரூர் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

செய்தியாளர் – சுந்தர்
நிழல் . இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed