September 26, 2021

பொன்னேரி அருகே,
இரு கிராமத்தினர் கோவில் வழிபாடு பிரச்சினையால் பதட்டம், ஒரு தரப்பினர் பொன்னேரி ஆர்டிஓ விடம் மனு…

1 min read
Spread the love

பொன்னேரி அருகே இரு கிராமத்தினர் சாமி வழிபாடு, மற்றும் கும்பாபிஷேகத்தின் போது சாமி திருவீதி உல வருவது தொடர்பாக பிரச்சினை ஒரு தரப்பினர் திரளாக வந்து, ஆர்டிஓ நேர்முக உதவியாளரிடம் மனு கொடுத்தனர். பொன்னேரி அடுத்த வஞ்சிவாக்கம் ஊராட்சிகு உட்பட்ட வீரங்கிமேடு மடிமை கண்டிகை கிராமத்திற்கு பொதுவாக நூறு வருடம் கடந்த எல்லையம்மன் கோவில் உள்ளது. பழமையான இந்த கோவில் தற்போது புதுப்பிக் கப்பட்டது. அடுத்த மாதம் 9 மற்றும் 10 தேதிகளில் கும்பாபிஷேகம் நடத்த கிராமத்தினரால் முடிவு செய்யப்பட்டு அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், வழிபாடு தொடர்பாக வீரங்கிபேடு கிராமத்திற்கு சுவாமி ஊர்வலம் வராது, என மடிமை கண்டிகை மக்கள் கூறியதையடுத்து வீரங்கிமேடு கிராமத்தினர் திரளாக வந்து பொன்னேரி ஆர்.டி.ஒ. நேர்முக உதவியாளரிடம் மனு அளித்தனர். மேலும், எல்லையம்மன் வழிபடாமல் இருப்பதால், தெய்வ குற்றம் ஏற்படும் என்ற அச்சத்தில் அப்பகுதி மக்கள் உள்ளனர். இச்சம்பவத்தால், அந்த இரண்டு கிராம மக்களிடமும் பதட்டமான சூழல் நிழவுகிறது.

செய்தியாளர் – சுந்தர்
நிழல் . இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed