September 16, 2021

அண்ணாமலைச்சேரி பெருமாள் கோவில் கும்பாபிஷேகம், மிக விமர்சியாக நடைபெற்றது…

1 min read
Spread the love

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி தாலுக்கா அண்ணாமலைசேரியில் உள்ள அருள்மிகு மஹாகணபதி ஆல யம், வெங்கடேச பெருமாள் ஆலயம், அங்காள பரமேஸ்வரி ஆலயம்,  திரெளபதியம்மன் ஆலயம்,  பாலசுப்ர மணிய சுவாமி ஆலயங்கள் உள்ளது. இந்த ஆலையங்கள் தற்போது புதுப்பிக்கப்பட்டு நூதன ஆலய அஷ்டபந்தன மஹாகும்பாபிஷேகம் நடைபெற்றது.

இதனையடுத்து சுவாமிக்கு கணபதி பூஜை, லட்சுமி பூஜை, நவகிரக பூஜை, கணபதி ஹோமம், லட்சுமி ஹோமம், நவகிரக ஹோமம், பூர்ணாஹதி தீபா ராதனை, மற்றும் பல்வேறு யாக பூஜைகளும் நடத்தபட்டன.

மேலும், நவகிரக கோபுர விமான மகா கும்பாபிஷேகம் நடை பெற்றது. இதனையடுத்து தீர்த்தம், பிரசாதம் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியை கோவில் முக்கிய நிர்வாகிகள் சந்திரன், ராமு, மணிகண்டன், சுதாகர், தேசப்பன், ராஜேந்திரன், ஆறுமுகம், ராஜேந்திரன்,

சிறுளபாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் உஷா கணேசன் ,ஒன்றிய கவுன்சிலர் சுமித்ராகுமார், துணைத்தலைவர் அரசம்ம ரவி, கோயில் ஸ்தபதி சுரேஷ், மற்றும் ஊர் பொதுமக்கள் இதற்கான ஏற்பா டுகளை செய்திருந்தனர்.

செய்தியாளர் – சுந்தர்
நிழல் . இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed