September 26, 2021

ராஜபாளையம் தொகுதி முழுவதும், கூடிய விரைவில் குடிநீர் பிரச்சனை முழுமையாக தீர்த்து வைக்கப்படும்…

1 min read
Spread the love

இராஜபாளையம் தொகுதி சேத்தூர் பேரூராட்சியில் இராஜபாளையம் சட்ட மன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ 4 லட்சம் மதிப்பீட்டில் 1வது வார்டு பேருந்து நிலையம் வடபுறத்திலும், 3 வது வார்டு மேட்டுப்பட்டி பகுதியிலும் தாமிரபரணி குடிநீருக்கு என தனியாக நீர்த்தேக்க தொட்டி அமைக்கப்பட்டது. அதனை இன்று காலை 9 மணி அளவில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ அவர்கள் திறந்து வைத்தார்.

இந் நிகழ்வில் பேசிய எம். எல். ஏ அவர்கள், சிறப்பாக செயல்பட்டு வரும் தமிழக முதல்வர் அவர்கள் அறிவுறுத்தலின்படி,
சேத்தூர் , செட்டியார்பட்டி பேரூராட்சியில் அனைத்து வார்டுகளிலும்,
இராஜபாளையம் தொகுதியில் உள்ள அனைத்து கிராமங்களிலும் தாமிரபரணி குடிநீருக்கு என தனியாக நீர்த்தேக்க தொட்டி அமைக்கப்பட்டு பொது மக்களுக்கு குடிநீர் வழங்கப்படும் எனக்கூறினார்.

இந்நிகழ்வில் நகர பொறுப்பாளர் (தெற்கு) ராமமூர்த்தி பொதுக்குழு உறுப்பினர் கனகராஜ் பேரூர் கழக செயலாளர் சிங்கப்புலி அண்ணாவி ஒப்பந்ததாரர் குமார் மற்றும் தி.மு.க நிர்வாகிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

செய்தியாளர் – ஜெகதீஸ்வரி
நிழல் . இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed