September 16, 2021

வடசென்னை அனல்மின் நிலையத்தில், மின்வாரிய துறையின், காசு கரியானதா? கரி காசானதா?

1 min read
Spread the love

திருவள்ளூர் மாவட்டம் அத்திப்பட்டில் உள்ள வட சென்னை அனல் மின் நிலையத்தில் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி ஆய்வு மேற்கொண்டார். துறைமுகத்தில் இருந்து கன்வேயர் பெல்ட் மூலமாக நிலக்கரி கொண்டு சேமித்து வைக்கப்படும் கிடங்கில் அமைச்சர் ஆய்வு செய்தார்.

அப்போது நிலக்கரி இருப்பு, எரியூட்டப்படும் அளவுகள், பதிவேடுகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். தொடர்ந்து அனல் மின் நிலையத்தில் நடைபெற்று வரும் மின் உற்பத்தி குறித்த தகவல்களை அனல்மின் நிலைய அதிகாரிகள் அமைச்சருக்கு எடுத்துரைத்தனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செந்தில்பாலாஜி வடசென்னை அனல் மின் நிலைய 1ம் அலகில் 7 ஆண்டுகளுக்கு பிறகு 100 நாட்களை கடந்து தொடர்சியாக மின் உற்பத்தி நடைபெற்று வருகிறது எனவும், இந்த பணிகளில் ஈடுபட்டுள்ள மின்வாரிய ஊழியர்களுக்கு பாராட்டு தெரிவித்தார்.

வடசென்னை அனல் மின் நிலையத்தில் மார்ச் 31ம் தேதி நிலவரப்படி 85 கோடி மதிப்பிலான 2.38லட்சம் டன் நிலக்கரி மாயமாகிள்ளது என்றார். பதிவேட்டில் உள்ளதற்கும் இருப்பில் உள்ள நிலக்கரிக்கும் 2.38 லட்சம் டன் குறைந்துள்ளதாக கூறினார்.

இதுகுறித்து அதிகாரிகள் மட்டத்தில் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக கூறினார். இதே போன்று தூத்துக்குடி, மேட்டூர் அனல் மின் நிலையங்களில் உள்ள நிலக்கரி இருப்பு குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

அதிக மின்கட்டணம், மின்தடை என மின்சாரத் துறையில் வரப்பட்டுள்ள 99%புகார்கள் மீது உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார். மின்கட்டண உயர்வு, வீடுகளுக்கான 100யூனிட் மின்சாரம் ரத்து, விவசாயிகளுக்கான இலவச மின்சாரம் ரத்து உள்ளிட்டவை கொள்கை முடிவு என்பதால் முதலமைச்சர் தான் அறிவிப்பார் எனவும், தற்போது இந்த கேள்விக்கு தான் பதிலளிக்க முடியாது என்றார்.

மின்சாரத்துறையில் ஒளிவுமறைவின்றி நிர்வாகம் நடைபெற்று வருகிறது எனவும் மின்மாற்றிகள் அமைப்பதற்கான செலவுகளை மின்துறையே ஏற்று கொள்ளும் எனவும் இதற்காக பொதுமக்களிடம் பணம் வசூலிக்கப்படாது. என அமைச்சர் செந்தில் பாலாஜி திட்டவட்டமாக தெரிவித்தார்.

தற்போதைய ஆட்சியில் வெளிப்படைத் தன்மையுடன் நிர்வாகம் நடைபெற்று வருவதாகவும் கடந்த ஆட்சியில் 40லட்ச ரூபாய் வரை கையூட்டு பெறப்பட்டு அதிகாரிகள் நியமித்து வந்ததாகவும், தற்போதைய ஆட்சியில் திறமை, தகுதியின் அடிப்படையில் மட்டுமே அதிகாரிகள் நியமனம் நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தார்.

செய்தியாளர் – சுந்தர்
நிழல் . இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed