September 16, 2021

பொன்னேரி அரசு மகளிர் மேல்நிலை பள்ளியில், அறிவியல் ஆய்வகத்தை, துரை சந்திரசேகர் எம்.எல்.ஏ திறந்து வைத்தார்…

1 min read
Spread the love

பொன்னேரி அடுத்த வேண்பாக்கம் அரசு மகளிர் மேல்நிலை பள்ளியில் மத்திய அரசின், அட்டல் டிங்கரிங் லேப் திட்டத்தின் கீழ் மாணவிகளுக்கான அறிவியல் ஆய்வகம் D. I.Y. A ரோபாடிக் அகாடமி சார்பில், பள்ளியின் எலக்ட்ரானிக் ஆய்வகத்தை பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகர் திறந்து வைத்து சிறப்புரையாற்றினார் .

இந்த நிகழ்ச்சியில், பள்ளி மாணவிகள் தாங்கள் உருவாக்கிய ரோபாட் இயந்திரங்கள் மற்றும் எலக்ட்ரிக், எலக்ட்ரானிக் இயந்திரங்கள் கண்காட்சியில் வைத்து அதுகுறித்து விளக்கம் அளித்தனர்.

பின்னர், சட்ட மன்ற உறுப்பினர் மாணவிகளிடையே கலந்துரையாடினார். நடைப்பெற்ற கருத்தரங்கு விழாவில் D.I.Y.A ரோபாடிக் அகாடமி நிறுவனர் உதய்சங்கர், துணை தலைவர் பிரேம்ஆனந்த், பொன்னேரி கல்வி மாவட்ட அலுவலர் சுப்பாராவ் பள்ளி தலைமை ஆசிரியர் ஆனந்தஸ்வரி மற்றும் பலர் உடனிருந்தனர்.

செய்தியாளர் – சுந்தர்
நிழல் . இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed