September 26, 2021

தென்காசி மாவட்டத்தில், புதிதாக தேர்வு செய்யப்பட்டுள்ள நேரடி காவல் உதவி ஆய்வாளர்களுக்கு அறிவுரைகள் வழங்கிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர்…

1 min read
Spread the love

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் மூலம் 968 பணி இடங்களுக்காக நடத்தப்பட்ட நேரடி உதவி ஆய்வாளர் பதவிக்கான தேர்வில் தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்த 11 பெண்கள் உட்பட 49 நபர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

அவர்களுக்கு 31/08/2021 முதல், பயிற்சி துவங்க உள்ளதால் காவல்துறை தலைமை இயக்குனர் சைலேந்திரபாபு அவர்களின் உத்தரவின் பெயரில் தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிருஷ்ணராஜ் அவர்கள் தலைமையில் பாரத் கல்வியியல் கல்லூரியில் வைத்து அவர்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது.

இது குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் பேசுகையில்; காவல்துறை பணியில் நேர்மையுடனும், பொறுப்புடனும், கண்ணியத்துடன் தனது பணியினை திறம்பட செய்ய வேண்டும், காவல்துறைக்கும் பொதுமக்களுக்கும் இடையே நல்லுறவை ஏற்படுத்தும் விதமாக செயல்பட வேண்டும், குற்றம் புரிந்தவர்களுக்கு பாரபட்சம் காட்டாமல் நீதியை நிலைநாட்ட வேண்டும் என்று அறிவுரைகள் வழங்கினார்.

மேலும், தங்களின் விடா முயற்சியால் கிடைத்த இந்த வெற்றியை பிறருக்கும் எடுத்துக்கூறி ஊக்கப்படுத்த வேண்டும் எனவும் அவர் கூறினார்.

செய்தியாளர் – ஜெகதீஸ்வரி
நிழல் . இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed