September 26, 2021

திருவள்ளூரில், 3 ஆயிரம் மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தை திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார்…

1 min read
Spread the love

நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யப்பட்டு பாதுகாக்கப்படும் நெல் மூட்டைகளை தவிர மீதியாகும் நெல் மூட்டைகள் மழையில் நனைந்து வீணாவதாக விவசாயிகளிடம் வந்த பல்வேறு கோரிக்கைகளை ஏற்று திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத் துறை சார்பில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் மீதியாகும் சுமார் 3 ஆயிரம் மெட்ரிக் டன் அளவிலான நெல் மூட்டைகளை பாதுகாக்கும் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தை மாவட்ட ஆட்சியர் ஆல்பிஜான் வர்கீஸ் இன்று துவங்கி வைத்தார்.

மேலும், நெல் மூட்டைகள் சரியான எடையில் கொள்ளளவு செய்வதையும் ஆய்வு செய்தார். இந்நிகழ்வில் வேளாண்மை தரக்கட்டுப்பாடு துணை மேலாளர் மதுரை நாயகம் வேளாண்மை துறை நேர்முக உதவியாளர் எபினேசர் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.

செய்திகள் – மேத்யூ
நிழல் . இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed