September 25, 2021

திருவண்ணாமலையில், வாகன நிறுத்தத்தை ஒழுங்குபடுத்த , போக்குவரத்து போலீசார் நடவடிக்கை…

1 min read
Spread the love

திருவண்ணாமலை நகரப் பகுதியில் உள்ள தேரடி வீதி, கடலைக் கடை மூலை ஆகிய பகுதிகளில், ஏராளமான இருசக்கர வாகனங்கள் சாலைகளிலேயே நிறுத்தப்படுவதால், அடிக்கடி போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. அதனால், பொதுமக்கள் அதிக அளவில் பாதிக்கப்படுவதாலும், அடிக்கடி விபத்துகள் ஏற்படுவதாலும், இப்பிரச்சினையை தீர்க்க வேண்டி போக்குவரத்து காவலர்களிடம் பொதுமக்கள் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், மாவட்ட கண்காணிப்பாளர் பவன் குமார் அவர்களின் ஆலோசனையின் பேரில், இன்று திருவண்ணாமலை போக்குவரத்து காவல் ஆய்வாளர் சுந்தரமூர்த்தி, உதவி ஆய்வாளர் மதிவாணன் மற்றும் காவலர்கள் இருசக்கர வாகனம் நிறுத்தும் இடத்தில் சாலையோரங்களில் கயிறு அமைத்து, வாகன நிறுத்தத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபட்டனர்.

செய்தியாளர் – மூர்த்தி
நிழல் . இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed