September 25, 2021

திருவள்ளூர் அருகே, ஓட்டுநரின் திறமையால் 30 பயணிகள் அதிர்ஷ்டவசமாக, உயிர் தப்பினர்…

1 min read
Spread the love

திருவள்ளூரில் இருந்து ராமஞ்சேரி பகுதிக்கு டி52 என்ற வழித்தடத்தில் அரசு பேருந்து இயக்கப்படுகிறது . அந்தப் பேருந்தை இன்று , வெங்கடேசன் என்ற டிரைவர் பணியில் ஈடுபட்டு இந்த பேருந்தை இயக்கி கொண்டிருந்தார்.

அந்தப் பேருந்து ராமஞ்சேரி மேட்டுப்பாளையத்தை நோக்கி சென்று கொண்டிருந்த போது, பூண்டி அடுத்த மோவூர் பகுதியில் வளைவு சாலையில் திரும்பும் போது எதிரே வந்த வாகனத்திற்கு வழி விடுவதற்காக பேருந்தை டிரைவர் வெங்கடேசன் சாலையின் இடது புறம் ஓரமாக ஓட்டிச்சென்று கொண்டு சென்றார்.

அப்போது எதிர்பாராத விதமாக சாலையை விட்டு பேருந்து விலகிச் ஓடியது. திடீரென பேருந்து கட்டுப்பாட்டை இழந்து சாலையில் இருந்து கீழிறங்கி வயல்வெளியில் நுழைந்ததால் ஒரு நிமிடம் செய்வதறியாது தடுமாற்றத்துடன் இருந்த டிரைவர் வெங்கடேசன் திடீரென சுதாரித்து கொண்டு பேருந்தை திறமையாக கட்டுப்படுத்தி நிறுத்தினார்.

திடீரென பேருந்து சாலையை விட்டு இறங்கி ஓடியதால் , பயத்தில் பேருந்தில் இருந்த பயணிகள் அலறினர் . ஆனால் , சிறிது நேரத்தில் டிரைவர் லாவகமாக பேருந்தை நிறுத்தியதால் , பேருந்தில் இருந்த பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். பின்னர், இந்த சம்பவத்தினால் பதட்டத்தில் இருந்த பயணிகளும், பொதுமக்களும் ஓட்டுநர் வெங்கடேசனை பாராட்டினர்.

செய்தியாளர் – மேத்யூ
நிழல் . இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed