September 16, 2021

பொன்னேரி அருகே கொடூரில், வீடு கட்ட பள்ளம் எடுத்த போது, பெருமாள், ஆண்டாள், அலமேலு சிலைகள் கிடைத்ததால் பரபரப்பு…

1 min read
Spread the love

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அருகே கொடூர் கிராமம் உள்ளது. அங்கு வசித்து வருபவர் கோபி, இவர் டீராக்டர் பழுது பார்க்கும் மெக்கானிக்காக பணியாற்றி வருகிறார். இவர் தற்போது வசித்துவரும் வீடு ஓடு போட்ட நிலையில் உள்ளது. அந்த வீடு கட்டி பல ஆண்டுகளாக ஆனதால், பழுதடைந்த நிலையில் உள்ள அந்த வீட்டின் பின்புறம் தளம் போட்ட புதிய வீடு கட்டுவதற்காக அஸ்திவாரம் அமைப்பதற்கான பணிகளை மேற்கொண்டார்.

அப்பொழுது , பள்ளம் தோண்டும் போது திடீரென, அந்தப் பள்ளத்தில் கடப்பாரை கருங்கல் மீது மோதுவது போன்ற ஒரு சத்தம் ஏற்பட்டுள்ளது. அதனால், கோபி அங்கு பள்ளம் எடுக்கும் வேலை செய்து கொண்டிருந்தவர்களிடம், ” அங்கு ஏதோ பெரிய கல் இருக்கிறது, அது எதற்காகவது தேவைப்படும். ஆகவே, அதை உடைக்காமல் அப்படியே வெளியில் எடுங்கள்” என கூறியதால், பள்ளம் தோண்டும் வேலை செய்து கொண்டிருந்தவர்கள் நிதானமாக மண்வெட்டியால் அந்த பள்ளத்தில் இருந்த மண்ணை ஒதுக்கி பார்த்த போது, அந்த இடத்தில் பெருமாள், ஆண்டாள், அலமேலு ஆகிய மூன்று தெய்வங்களின் சிலைகள் கிடைத்துள்ளது.

இதுகுறித்து, தகவல் அக்கம்பக்கத்தில் உள்ளவர்களுக்கு தெரிந்தவுடன் மக்கள் அங்கு கூடி ஆச்சரியமாக அந்த தெய்வ சிலையை பார்த்தனர். மேலும், அந்த சிலைகளுக்கு பாலபிஷேகம் செய்து தீப ஆராதனைகளும் செய்தனர். அந்த சிலைகள் லேசாக பச்சை நிறத்தில் கருங்கல்லால் ஆனது போல் இருந்து உள்ளது.

உடனே, இதுகுறித்து பொன்னேரி வருவாய் துறையினருக்கு உடனடியாக தகவல் கூறினர். மேலும், சிலை கிடைத்த இடத்தில் இருந்து 100 மீட்டர் தூரத்தில் பெருமாள் ஆலயம் இருப்பதால், ” காலந்தோறும் அந்த கோயிலில் பெருமாள் திருவுருவப் படத்திற்கு பூஜை செய்து வருவதால் , அந்த கோயிலில் இந்த சிலைகளை வைத்து வணங்குவதற்கு அரசு சார்பில் ஏற்பாடு செய்ய வேண்டும் ” என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

செய்தியாளர் – பூர்ணவிஷ்வா
நிழல் . இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed