September 16, 2021

திருவண்ணாமலை மாவட்டத்தில் அரசு பள்ளிகள் திறக்கும் போது, கடைபிடிக்க வேண்டிய கொரோனா வழிகாட்டு நெறிமுறைகள் குறித்து, ஆலோசனை கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் பா.முருகேஷ் தலைமையில் நடைபெற்றது…

1 min read
Spread the love

திருவண்ணாமலை மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், பொது சுகாதரம் மற்றும் நோய் தடுப்பு துறை வெளியிட்டுள்ள, கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி, வருகின்ற 1ம் தேதியில் இருந்து 9 வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள் திறப்பது குறித்த ஆய்வு கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் பா. முருகேஷ் தலைமையில் நடைபெற்றது.

பள்ளிகள் திறக்கப்படும் போது பொது சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றவது குறித்து அறிவுரைகள் வழங்கப்பட்டன. அனைத்து ஆசிரியர்களும், கொரோனா தடுப்பூசி போடப்பட்டு இருப்பதை உறுதி செய்தல், நிர்வாகத்துடன் இணைந்து பள்ளி வளாகத்தினை தூய்மைப்படுத்துதல், மாணவர்கள் பள்ளிக்கு வருகை தரும் போது முறையான கோவிட-19 முன்னெச்சரிக்கை நடைமுறையினை உறுதி செய்தல், சுகாதாரத்துறை மூலம் மாணவர்கள் ஆசிரியர்களை முழுமையாக பரிசோதனை செய்தல் போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கையினை மேற்கொள்ள அறிவுரை வழங்கப்பட்டது.

நிலையான வழிகாட்டுதல் நெறிமுறைகளில் குறிப்பிடப்பட்டு உள்ளவாறு மாணவர்களுக்கு இடையே 6 அடி சமூக இடைவெளி இருக்கும் வகையில் இருக்கை வசதிகளை ஏற்படுத்துதல், அதற்கேற்ற வகையில் கால அட்டவனையை தயாரித்தல் உள்ளிட்ட முன்னேற்பாடு நடவடிக்கையினை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டது. மேலும், மாணவர்கள் பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் அனைவருக்கும் கோவிட்-19 முன்னெச்சரிக்கை தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்த அறிவுரை வழங்கப்பட்டது.

இந்த ஆய்வு கூட்டதில் மாவட்ட ஆட்சித்தலைவர் செப்டம்பர் மாதம் 9 வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்கள் பள்ளிக்கு செல்லலாம் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. துறை அதிகாரிகளிடம் கோரோனா தொற்று பாதிப்பு இல்லாமல், பள்ளி, மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு பள்ளி வருவது முதல் வீட்டிற்கு செல்லும் வரை மாணவர்களுக்கு பாதுகாப்பு தர வேண்டும். அனைத்து ஆசிரியர்களும் 100 சதவிகிதம் கொரோனா தடுப்பூசி செலுத்தி இருக்க வேண்டும் என்று எச்சரித்தார்,

மேலும், தடுப்பூசி செலுத்தி கொண்ட ஆசிரியர்கள் மட்டுமே பள்ளிக்கு வர வேண்டும் என பள்ளி கல்வித்துறை மூலம் சுற்றரிக்கை அனுப்ப வேண்டும். தமிழக அரசு தெரிவித்த கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றாத பள்ளிகளின் மீது புகார்களை தெரிவிக்க கட்டணமில்லா தொலைபேசி எண் ஏற்படுத்தி தர நடவடிக்கை எடுக்கப்படும். பள்ளி மாணவர்கள் தங்கும் விடுதிகளின் மாணவர்களை வெளியில் அனுப்பாமலும், பள்ளி முடிந்தவுடன் விடுதிக்கு வருமாறும் அறிவுரை வழங்க வேண்டும். தமிழக அரசின் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை முறையாக பின்பற்ற வேண்டும் என்று மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் மொத்தம் 1600 பள்ளிகள் உள்னன. இதில் 545 உயர்நிலைப்பள்ளிகள் உள்ளன. இதில் 9 வகுப்பு முதல் 12 வகுப்பு வரை உள்ளன. மொத்த மாணவர்கள் 1,27,741 பேர் உள்ளன. இதில் சுழற்சி முறையில் ஒரு நாளைக்கு 50 சதவீகித மாணவர்கள் மட்டுமே மள்ளிக்கு வரவேண்டும். பள்ளி மாணவர்கள் மட்டும் பள்ளி சென்று வர சிறப்பு பேருந்து வசதிகள் ஏற்பாடு செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் கொரோனா வைரஸ் நோய் தொற்று கட்டுப்படுத்தப்பட்ட பகுதியில் இருந்து ஆசிரியர்கள், மாணவர்கள் யாரும் பள்ளிக்கு வரக்கூடாது என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.
நிறுத்தப்பட்டுள்ள கல்வி நிறுவன வாகனங்களை மீண்டும் பொதுசாலையில் இயக்கப்படுவதற்கு முன்பாக மோட்டர் வாகன சட்டம் மற்றும் விதிகளின்படி அவை நிறுத்தப்பட்ட காலத்திற்கு வரி தீர்வை பெற்றும் 01.9.2021 முதல் செலுத்தப்பட வேண்டிய சாலை வரியை முறையாக செலுத்தவும் அனைத்து தனியார் பள்ளி நிர்வாகத்திற்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.

பள்ளி வாகனங்கள் நடப்பு ஆவணங்களுடன் முறையாக இயக்கப்படுவதை காவல்துறை மற்றும் போக்குவரத்து துறை அதிகாரிகள் அவ்வபோது ஆய்வு செய்து நடப்பில் இல்லாத ஆவணங்களுடன் இயக்கப்படும் கல்வி நிறுவன வாகனங்களை சிறைபிடித்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். பள்ளி மாணவர்களை ஏற்றி செல்லும் கல்வி நிறுவன வாகனங்களில் பணிபுரியும் ஓட்டுநர், உதவியாளர் ஆகியோர் கட்டாயம் கொரோனா தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும் . இக்கூட்டத்தில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் இரா.பூபதி, உதவி ஆட்சியர் (பயிற்சி) கட்டா ரவி தேஜா, இணை இயக்குநர்கள், நகராட்சி ஆணையர்கள், செயல் அலுவலர்கள் மற்றும் அனைத்துத்துறை அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

செய்தியாளா – மூர்த்தி
நிழல் . இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed