September 26, 2021

பழவேற்காட்டில் கடலோர பழங்குடி மற்றும் கடலோர ஆதிதிராவிடர் மக்களுக்கு உவர்நீர் தொழில் நுட்பங்களுடன் மீன், இறால், நண்டு வளர்ப்பு தொழிலை மாவட்ட ஆட்சியர் துவக்கி வைத்தார்…

1 min read
Spread the love

திருவள்ளூர் மாவட்டம், பழவேற்காட்டில் கோட்டைக்குப்பம் ஊராட்சியை சேர்ந்த தோனிரேவு கிராமத்தில் வசிக்கும் 20 ஆதிதிராவிட குடும்பங்களுக்கும், காட்டூர், லட்சுமிபுரம் கிராமத்தை சேர்ந்த 10 குடும்பங்களுக்கும் ஐ.சி.ஏ.ஆர் மத்திய உவர்நீர் ஆராய்ச்சி நிலையம், சிபா பழங்குடி திட்டம் மற்றும் சிபா ஆதிதிராவிடர் மக்கள் நலத் திட்டம் சார்பில் கடலோர பழங்குடி மற்றும் கடலோர ஆதிதிராவிடர் மக்களுக்கு உவர்நீர் தொழில்நுட்பங்களுடன் வேளாண்மை சார்ந்த தொழில்நுட்பங்களை இணைத்து மாற்று வாழ்வாதாரம் ஏற்படுத்தும் திட்டம் நடைபெற்று வருகிறது.

உவர் நீர் தொழில்நுட்பங்களாகிய அடைப்பு வேளி மற்றும் குளங்களில் பால் கெண்டை மீன் வளர்ப்பு, நாற்றங்காலில் கொடுவா மீன் குஞ்சு வளர்ப்பு, அடைப்பு வேளியில் நண்டு வளர்ப்பு ஆகிய தொழில் நுட்பங்களோடு மீன் உணவு கூடம் மற்றும் வேளாண்மை சார்ந்த தொழில்நுட்பங்களாகிய கோழி வளர்ப்பு, காளான் வளர்ப்பு, வீட்டு தோட்டம் ஆகியவை இத்திட்டத்தின் மூலம் வழங்கப்பட்டது.

இந்த தொழில்நுட்பங்களை நல்ல முறையில் செயல்படுத்தி வருமானம் ஈட்டமுடியும். மீன்பிடித்தொழில் இல்லாத சமயங்களில் இந்த தொழில்நுட்பங்களால் வரும் வருமானம் இந்த குடும்பங்களின் வாழ்வாதாரத்திற்கு பெரும் உதவியாக இருக்கும். கிராமத்தில் இருக்கும் உவர் நீர் நிலைகளை நல்லமுறையில் உபயோகப்படுத்தி இந்த தொழில்நுட்பங்களை செயல்படுத்தலாம்.

இந்த திட்டத்திற்கான துவக்க விழாவில் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் ஆல்பின் ஜான் வர்கீஸ் கலந்துகொண்டு பயனாளிகளுக்கு மீன் குஞ்சுகளை வழங்கினார்‌. அவருடன் மாவட்ட மீன்வளத்துறை உதவி இயக்குனர் வேலன், கோட்டாட்சியர் செல்வம், வட்டாட்சியர் மணிகண்டன், மீஞ்சூர் ஒன்றியக்குழு பெருந்தலைவர் ரவி ஆகியோர் பங்கேற்றனர். சிபா இயக்குனர் டாக்டர் கே.பி.ஜிதேந்திரன், இத்திட்டத்தின் தலைவி மூத்த விஞ்ஞானி டாக்டர்.சாந்தி மற்றும் மூத்த விஞ்ஞானிகள் டாக்டர்.சாய்ராம்,டாக்டர் செந்தில் முருகன்,நிதி மற்றும் கணக்கு மூத்த அதிகாரி பாபு,துணை நிதி மற்றும் கணக்கு அதிகாரி ஸ்ரீகாந்த் மற்றும் ஏனைய சில விஞ்ஞானிகள், பழவேற்காடு மீனவக் கூட்டுறவு சங்கத் தலைவர் நாராயணன், துணைத் தலைவர் சந்திரசேகர், கோட்டைக்குப்பம் ஊராட்சி மன்ற தலைவர் சம்பத், ஒன்றிய கவுன்சிலர் எம்.கே. தமின்சா, ஊராட்சி மன்ற துணை தலைவர் வாணி சங்கர் மற்றும் பல்வேறு துறைகளை சேர்ந்த அதிகாரிகள் இதில் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

செய்தியாளர் – பூர்ணவிஷ்வா
நிழல் . இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed