September 26, 2021

பெரிய மாங்கோடு கிராமத்தில், செல்வ விநாயகர் ஆலய அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் வெகு விமர்சியாக நடைபெற்றது…

1 min read
Spread the love

திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் ஒன்றியம் பெரியமாங்காடு கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ செல்வ விநாயகர் ஆலயம் பக்தர்களின் நிதி உதவியால் புதிதாக புனரமைக்கப்பட்ட இத்திருக்கோவிலில் மகா கும்பாபிஷேகம் நடை பெறுவதற்கான பணிகள் நடைபெற்று வந்தன.

கடந்த 24ம் தேதி கணபதி ஹோமத்துடன் தொடங்கி முதல் கால யாக பூஜை, இரண்டாம் கால யாக பூஜை, கோ பூஜை , மகா தீபாராதனை நடைபெற்று பல்வேறு புண்ணிய நதிகளில் இருந்து கொண்டு வரப்பட்ட புனித நீரை வேதமந்திரங்கள் முழங்க சிவாச்சாரியார்கள் கலசத்தின் மீது புனிதநீரை ஊற்றி மகா கும்பாபிஷேகத்தை நடத்தினர்.

அப்போது அங்கு கூடியிருந்த பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

சிறப்பு விருந்தினராக மீனவர் அணி மாவட்ட செயலாளர் மாங்கோடு மோகன் கலந்து கொண்டு ஊர் பொதுமக்கள் அவருக்கு கும்ப மரியாதை அளித்தனர். ஊர் பொதுமக்கள் சிறப்பாக ஏற்பாடு செய்த அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

செய்தியாளர் – சுந்தர்
நிழல் . இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed