September 16, 2021

சென்னை சென்ட்ரல் புறநகர் ரயில் நிலையத்தில் பயணச்சீட்டு வழங்குவதில் காலதாமதம், ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க பயணிகள் கோரிக்கை…

1 min read
Spread the love

சென்னை சென்ட்ரல் புறநகர் ரயில் நிலையத்தில் இருந்து தினமும் அரக்கோணம் மார்க்கமாக 150 ரயில்களும், கும்முடிபூண்டி மார்கமாக 64 ரயில்களும் இயக்கபடுகின்றன. இந்த ரயில்களின் மூலமாக கும்மிடிப்பூண்டி மார்க்கத்தில் சுமார் 22 ரயில் நிலையங்களும், அரக்கோணம் மார்க்கத்தில் 30 க்கும் மேற்பட்ட ரயில் நிலையங்களும் உள்ளன.

இந்த ஊர்களில் இருந்து தினமும் பல ஆயிரக்கணக்கான பயணிகள் சென்னைக்கு வந்து செல்கின்றனர். அதில், கம்பெனிகள் மற்றும் அலுவலகம் , பள்ளி , கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ மாணவிகள் போன்றவர்கள் மாத கட்டணம் செலுத்தி மாதாந்திர பயண அட்டைகளை , பெற்று பயணம் செய்கின்றனர் .

மேலும், வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் போன்றவர்கள் தினமும் பயண சீட்டை பெற்று பயணித்து வருகின்றனர். இந்நிலையில், சென்னை சென்ட்ரல் புறநகர் ரயில் நிலையத்திலிருந்து மாதாந்திர பயணச்சீட்டு பெறுவதற்கும் தினம் பயணிப்பவர்கள் பயணச் சீட்டு பெறுவதற்கும் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் 1 முதல் 4 வரை உள்ள கவுண்டர்களில் பயணச் சீட்டுகளையும், மாதாந்திர சீசன் டிக்கட்டுகளையும் பெற்று வந்தனர்.

இந்நிலையில் , தற்போது 1 முதல் 4 வரை இயங்கி வந்த டிக்கட் கவுண்டர்கள் மூடப்பட்டு , புறநகர் பயணிகளுக்காக பயணச் சீட்டுகள் மற்றும் மாதாந்திர பயண அட்டைகளை வழங்குவது நான்காவது கவுண்டர் முதல் பத்தாவது கவுண்டர்கள் வரை வழங்கபடும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால், தற்போது , 7 மற்றும் 9 ம் எண் கவுண்டர்களில் மட்டுமே பயணச்சீட்டுகள் வழங்கப்பட்டு வருகிறது .

அதனால் பயணச்சீட்டு வாங்க வரும் பயணிகள் வெகு நேரம் காத்திருக்க வேண்டிய சூழ்நிலை நிலவுகிறது. மேலும், குறைந்த நேரத்தில் அதிக அளவில் கூட்டம் சேரக்கூடிய நெருக்கடி நிலையும் ஏற்படுகிறது. அதுமட்டும் இல்லாமல் பல பயணிகள் வெகு நேரம் காத்திருந்து பயண சீட்டை பெற்று கொண்டு செல்வதற்குள், ரயில் புறப்பட்டு விடுவதால் பயணிகள் அவதி, அவதியாக ஓடிச்சென்று ரயிலில் ஏற முற்படுவதால் அவர்கள் கீழே விழுந்து விபத்துகளும் ஏற்படுகிறது.

ஆகவே, இந்நிலையை போக்க, ரயில்வே நிர்வாகம் பயணிகள் வசதிக்காக அங்கு அறிவிப்பு பலகையில் அறிவிக்கப்பட்டு உள்ளபடி , புறநகர் ரயில் பயணிகளுக்கு பயணச்சீட்டுகளையும் , மாதாந்திர பயண சீட்டுகளையும் வழங்குவதற்க்கு ,
“கூடுதலான கவுண்டர்கள் அமைக்கப்பட வேண்டும்” என பயணிகள் வேண்டுகோள் வைத்துள்ளனர்.

G. பலகிருஷ்ணன்
நிழல் . இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed