September 26, 2021

பொன்னேரியில் அதிமுக இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை உறுப்பினர் அட்டை வழங்கிய நிகழ்ச்சி…

1 min read
Spread the love

பொன்னேரியில் அதிமுக இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை மாவட்டச் செயலாளர் T.C.மகேந்திரன் ஏற்பாட்டில் உறுப்பினர் அட்டை வழங்குதல் மற்றும் உள்ளாட்சி தேர்தல் வியூகம் குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

திருவள்ளூர் வடக்கு மாவட்ட செயலாளர் சிறுணியம் பலராமன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் வேடசந்தூர் பரமசிவம் பேசுகையில்; அதிமுக ஒரு மாபெரும் இயக்கம் இதை யாராலும் அழிக்க முடியாது வரும் உள்ளாட்சி மன்ற தேர்தலிலும், நாடாளுமன்ற தேர்தலிலும் அதிமுக வெற்றி பெறும் என்று கூறினார் .

இதில் , முன்னாள் எம்எல்ஏக்கள் கே எஸ் விஜயகுமார், பொன்ராஜா , ஒன்றிய செயலாளர் மோகன் வடிவேல் , நாயுடு பிரகாஷ் நகர செயலாளர் உபதுல்லா , ஆரணி தயாளன் , மகளிர் அணி மாவட்ட செயலாளர் பத்மஜா ஜனார்த்தனம் , பொதுக்குழு உறுப்பினர் அபிராமன் ஓ எம் கிருஷ்ணன் ஸ்ரீதர் பல்லவட ரமேஷ் ஆரணி குணா பூபதி கவுன்சிலர்கள் பானு பிரசாத் கிருஷ்ணபிரியா வினோத் சுமித்ரா குமார் ஏராளமான பாசறை இளம் பெண்கள் பாசறை நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

செய்தியாளர் – சுந்தர்
நிழல் . இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed