September 25, 2021

விருதுநகரில் 18 லட்சம் மதிப்பிலான 55 மூடைகள் குட்கா புகையிலை பறிமுதல். இருவர் கைது பொலிரோ கார் பறிமுதல் …

1 min read
Spread the love

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து சிவகாசி செல்லும் சாலையில் ஈஞ்சார் விலக்கு அருகில் குட்கா புகையிலை பொருட்கள் இருப்பதாக மாவட்ட கண்காணிப்பாளர் அவர்களுக்கு தகவல் கிடைத்துள்ளது. அதனடிப்படையில் தனிப்படையினர் அப்பகுதியில் சோதனை செய்ததில்

ஸ்ரீவில்லிபுத்தூர் இந்திரா நகர் பகுதியைச் சேர்ந்த நவநீதகிருஷ்ணன் மற்றும் கார்த்திக் என்பவர் ஈஞ்சார் விளக்கு அருகில் சரவண மணிகண்டன் என்பவருக்கு சொந்தமான பட்டாசு குடோனில் குட்கா புகையிலை பொருட்கள் வைத்திருந்து விற்பனை செய்து வருவதாக தெரியவந்தது. இதனை அடுத்து சம்பவ இடத்துக்கு மாவட்ட தனிப்படை பிரிவு சார்பு ஆய்வாளர் கௌதம் விஜய் தலைமையில் போலீசார் சோதனை செய்தபோது பட்டாசு குடோனில் பட்டாசுகள் உடன் கலந்து சுமார் 18 லட்சம் மதிப்பிலான 55 குட்கா புகையிலை மூட்டைகள் வைத்திருந்தது தெரியவந்தது.

இதனை அடுத்து அவரிடமிருந்து சுமார் 18லட்சம் மதிப்பிலான 55 குட்கா புகையிலை மூட்டைகளை பறிமுதல் செய்து நவநீதகிருஷ்ணன் கார்த்திக் ஆகிய இருவரை கைது செய்து அவரிடமிருந்த பொலிரோ கார் பறிமுதல் செய்தனர் இந்த சம்பவம் குறித்து திருத்தங்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஏற்கனவே கடந்த மாதம் ஸ்ரீவில்லிபுத்தூரில் 80 லட்சம் மதிப்பிலான குட்கா புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்து இவரைக் கைது செய்தது குறிப்பிடத்தக்கது.

செய்தியாளர் – ஜெகதீஸ்வரி
நிழல் . இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed