September 26, 2021

சென்னையில் ஆட்டோவில் தவற விட்ட 90,000 ஆயிரம் பணத்தை 3 மணி நேரத்தில் கண்டு பிடித்து உரியவரிடம் ஒப்படைத்த எண்ணூர் காவல் துறையினரை உதவி ஆணையர் வெகுவாக பாராட்டினார்…

1 min read
Spread the love

டெல்லியை சேர்ந்த முகமது வசீம்(35), மணலி புதுநகர் ஆண்டார்குப்பம் பகுதியில் கடந்த 3 மாதங்களாக கார்பெண்டராக வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த மாதம் டெல்லியில் இருந்து வந்த அவரது அம்மா சந்தாபீ (55)-ஐ டெல்லிக்கு அனுப்பி வைக்க சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் செல்வதற்காக புறப்பட்டனர். முகமது வசீம் தனது தாயை ரயில் நிலையத்தில் வரை சென்று வழியனுப்பி வைப்பதற்காக அவரது மனைவி நஜ்மி பர்வீன் ஆகியோர் மணலி புதுநகர் ஆண்டார் குப்பம் பேருந்து நிறுத்தத்திற்கு 3 பேரும் நடந்து வந்தனர்.

பின்னர் அங்கிருந்து ஆட்டோ ஒன்றில் ஏறி விம்கோ மெட்ரோ ரயில் நிலையத்திற்கு வந்து இறங்கி, அங்கிருந்து மெட்ரோ ரயிலில் ஏறி சென்ட்ரல் ரயில் நிலையம் சென்றனர். சென்ட்ரலில் இருந்து டெல்லிக்கு ரயிலில் செல்லும் போது சந்தாபீ (55) தமது தலையணை காணாமல் போனதை அறிந்து செல்போன் மூலம் தகவல் தெரிவித்துள்ளார். தலையணையை ஆட்டோவின் பின்புறம்‌ வைத்ததாகவும் அந்த தலையணைக்குள் 90,000 ஆயிரம் பாதுகாப்பிற்காக அதில் வைத்து இருந்ததாக தெரிவித்துள்ளார்.

இதனை தொடர்ந்து எண்ணூர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் எண்ணூர் காவல் துறையினர் விம்கோநகர் மற்றும் ஆண்டார் குப்பத்தில் உள்ள கேமரா பதிவுகளை வைத்து ஆட்டோ எண்ணை ( TN 03 AA 3295) கண்டு பிடித்து ஆட்டோ ஓட்டுனர் முருகன் (60)என்வரிடம் விசாரணை செய்ததில், குப்பை என நினைத்து ஆண்டார்குப்பம் அருகே உள்ள குப்பையில் தூக்கி வீசியதாக ஆட்டோ ஓட்டுநர் முருகன் கூறியுள்ளார்.

ஆண்டார்குப்பம் குப்பை தொட்டியில் இருந்த தலையணையை கண்டெடுத்த காவல் துறையினர், எண்ணூர் காவல் உதவி ஆணையாளர் . பிரம்மானந்தம் முன்னிலையில் பிரித்து பார்த்த போது அதில் காணாமல் போனதாக கூறப்பட்ட பணம் 90,000 ஆயிரம் இருந்தது. இதனை முகமது வசீமிடம் ஒப்படைத்தனர். துரிதமாக செயல்பட்டு காணாமல் போன பணத்தை 3 மணி நேரத்தில் கண்டு பிடித்த எண்ணூர் காவல் துறையினரை எண்ணூர் உதவி ஆணையாளர் பிரம்மானந்தம் பாராட்டினார்.

நிழல் . இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed