September 26, 2021

பழவேற்காட்டில் இருந்து ஆந்திராவிற்கு கடத்த முயன்ற 179 மூட்டை அரிசி பறிமுதல், தந்தை , மகன் கைது…

1 min read
Spread the love

திருவள்ளூர் மாவட்டம் ஆந்திராவின் எல்லையோர மாவட்டமாக உள்ளதால் கும்மிடிப்பூண்டி பொன்னேரி போன்ற பகுதிகளில் இருந்து லாரிகள் மட்டும் ரயில்கள் மூலம் ரேஷன் அரிசி கடத்தப்பட்டு வந்தது இந்நிலையில் அவைகளெல்லாம் போலீசார் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருவதால் தற்போது கடல் மார்க்கமாக நீர்வழி மார்க்கமாக நூதனமான கடத்தல் பாதையை கடத்தல்காரர்கள் பயன்படுத்தி வருகின்றனர் என்ற தகவல் சமீபகாலமாக அதிகாரிகளுக்கு வந்து கொண்டிருந்த நிலையில் ,

தற்போது, திருவள்ளூர் மாவட்டம், பழவேற்காடு சுற்றுவட்டார பகுதியான சாத்தான்குப்பம் உள்ளிட்ட மீனவ கிராமங்களில் இருந்து பழவேற்காட்டின் ஏரி மூலம் ஆந்திர மாநிலம், நெல்லூர் மாவட்டம், தடா மண்டலம் அடுத்த பாலகிருஷ்ணாபுரம் கரூர் பகுதிக்கு கடத்த முயன்றனர்.

இரண்டு நாட்டுப் படகுகள் மூலம்170 மூட்டை ரேஷன் அரிசி மற்றும் ஒரு மூட்டை பருப்பு உள்ளிட்ட பொருட்களை கடத்த முயலும் போது பழவேற்காட்டில் உள்ள மாவட்ட கடலோர காவல் படையினருக்கு வந்த ரகசிய தகவலின் பேரில், அவர்கள் பழவேற்காடு கடற்கரை பகுதிகளை அதிரடியாக சோதனை செய்தனர்.

அப்போது இரண்டு நாட்டு படகு மூலம் ரேஷன் பொருட்கள் கடத்தலில் ஈடுபட்ட ஆந்திர மாநிலம் பால கிருஷ்ணாபுரம் கரூரைச் சேர்ந்த மூர்த்தி என்பவரையும் அவரது மகன் ராஜ்குமாரையும் கடத்தலுக்காக பயன்படுத்தப்பட்ட நாட்டு படகுகளையும் கைப்பற்றிய மாவட்ட கடலோர காவல் படையினர், ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபட்ட தந்தை மகன் இருவரையும் கைது செய்தனர்.

பறிமுதல் செய்யப்பட்ட படகுகளோடு கரைக்கு வந்த நிலையில், பொன்னேரி வட்ட வழங்கல் அலுவலர் உமா சங்கரி தலைமையிலான வருவாய் துறையினர் சோதனை செய்து, கைப்பற்றிய அரிசி மூடைகளை லாரியில் ஏற்றி பஞ்செட்டியில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கிடங்கிற்கு அனுப்பி வைத்தனர். கைது செய்யப்பட்ட இருவரிடமும் திருவள்ளூர் குடிமை பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

செய்தியாளர் – பூர்ணவிஷ்வா
நிழல் . இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed