September 16, 2021

திருவண்ணாமலையில், நல்லாசிரியர் விருதுக்கு 13 பேர் தேர்வு…

1 min read
Spread the love

திருவண்ணாமலை மாவட்டத்தில், 13 பேர் நல்லாசிரியர் விருது பெற தேர்வு செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தெரிவித்துள்ளார். பெயர் விவரங்கள் ; கலசபாக்கம் ஒன்றியம் கீழ்குப்பம், அரசு உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் சீ.கிருபானந்தன், வேட்டவலம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் அ.முருகையன், கண்ணமங்கலம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் து. விஜயலட்சுமி, குப்பநத்தம் அரசு உயர்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் இரா.தமிழ்கனி, மல்லவாடி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கி.முருகன்,

வந்தவாசி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் ம.ரகு, மண்மலை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர் ஜே. ஜேம்ஸ் எட்வர்ட் தாஸ், ஜவ்வாதுமலை கூட்டாத்தூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர் ஜே.பரந்தாமன், சு.வாளவெட்டி ஆதிதிராவிடர் நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர் து.மோகன்ராஜ், காட்டுவானத்தம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர் கோ. சேட்டு,

தண்டராம்பட்டு ஒன்றியம் நா.மோட்டூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர் இரா.அசோகன், துரிஞ்சாபுரம் ஒன்றியம் கீழாத்தூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர் மூ.கேசவன், செய்யாறு இந்தோ அமெரிக்கன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி தமிழாசிரியர் கா. கோவேந்தன் ஆகியோர் ஆவர்.

செய்தியாளர் – மூர்த்தி
நிழல் . இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed