September 26, 2021

இராஜபாளையத்தில் ஜமீன் கொல்லங்கொண்டான் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், கர்ப்பிணி பெண்களுக்கு சத்துள்ள அன்பளிப்பு பொருட்களை எம்.எல்.ஏ எஸ்.தங்கபாண்டியன் அவர்கள் வழங்கினார்…

1 min read
Spread the love

இராஜபாளையம் தொகுதியில் ஜமீன் கொல்லங்கொண்டான் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் 67 கர்ப்பிணி பெண்களுக்கு நியூட்ரசின் அன்பளிப்பு பொருட்களை (சத்து பொருள்கள்) எம்.எல்.ஏ எஸ்.தங்கபாண்டியன் அவர்கள் வழங்கினார். இந்நிகழ்வில் பேசிய எம்.எல்.ஏ அவர்கள் 2/09/2021 அன்று சட்டமன்றத்தில் நடைபெற்ற சுகாதார துறை மானிய கோரிக்கையில் தமிழக முதல்வர் மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்கள் ஜமீன் கொல்லங்கொண்டான் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு 1கோடி மதிப்பில் கர்ப்பிணி பெண்களுக்கு புதிய கட்டிடம் அமைப்பதாக அறிவித்துள்ளார்.

தமிழகத்தில் 80 சதவீதம் குழந்தைகள் சுகபிரசவமாக பிறக்க முதல்வர் அவர்கள் அனைத்து நடவடிக்கையும் துரிதப்படுத்தி உள்ளார் மற்றும் கர்ப்பிணி பெண்கள் அரசு ஆரம்பசுகாதார நிலையத்திற்கு சென்று வர இரண்டு இலவச அரசு பேருந்துகள் இயக்கப்படும் எனவும் அறிவித்துள்ளார்.

மேலும், எந்த குழந்தையும் நல்ல குழந்தை தான் மண்ணில் பிறக்கையில் அவர்களை நல்ல குழந்தையாக வளர்ப்பது பெற்றோர்கள் கடமை என சிறப்புரை ஆற்றினார். தொடர்ந்து
பி.எஸ்.கே மாலையாபுரத்தில் புதிய துணை சுகாதார மைய கட்டிடம் புதியதாக அமைக்கப்படும் எனக் கூறினார்.

இந்நிகழ்வில் பொதுக்குழு உறுப்பினர் கனகராஜ் டாக்டர் கருணாகரபிரபு கவுன்சிலர் மாரிமுத்து கிளை செயலாளர் வனராஜ் மற்றும் கழகநிர்வாகிகள் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

செய்தியாளர் – ஜெகதீஸ்வரி
நிழல் . இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed