September 16, 2021

செங்கம் அருகே மேல்புழுதியூர் பகுதியில், சாலை ஓரத்தில் தடுப்பு சுவர் இல்லாமல் அபாயகரமாக கிடக்கும் கிணறால் மக்கள் அச்சம்…

1 min read
Spread the love

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த மேல்புழுதியூரில் இருந்து அம்பேத்கர் நகருக்கு செல்லும் வழியில் சாலை ஓரத்தில் தடுப்பு சுவர் இல்லாமல் கிடக்கும் அபாயகரமான கிணறு உள்ளது. அதனால், அந்த சாலையின் வழியாக செல்லக்கூடிய வாகனங்கள் கவனக்குறைவாக செல்லும் சூழ்நிலையில் விபத்துக்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளதாக கருதி அப்பகுதி மக்கள் அச்சம் கொண்டுள்ளனர்.

தற்போது நீண்ட இடைவெளிக்குப் பிறகு பள்ளிகளும் திறக்கப்பட்டுள்ள சூழ்நிலையில் காலையிலும், மாலையிலும் பரபரப்பாக செல்லக்கூடிய பள்ளி வாகனங்களும் விபத்துகள் ஏற்பட வாய்ப்புள்ளது என கருதி அப்பகுதி மக்கள் அச்சம் கொண்டுள்ளனர். சம்பந்தப்பட்டவர்கள் அந்தக் கிணற்றுக்கு தடுப்புச்சுவர் அமைக்க வேண்டி பொதுமக்களும், ஆர்வலர்களும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

செய்தியாளர் – மூர்த்தி
நிழல் . இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed