September 26, 2021

திருவண்ணாமலை நகராட்சியில் ஒரு காமெடி, பணியை செய்து முடிக்காமல் ஒப்பந்த கோப்பில் கையெழுத்து கேட்ட ஒப்பந்தக்காரர் கையில் கையெழுத்துப் போட்ட ஆணையர்…

1 min read
Spread the love

திருவண்ணாமலையில் வசித்து வருபவர் குயிலம் செல்வராஜ் இவர் திருவண்ணாமலை நகராட்சியில் சாலை பணிகள், கட்டிட பணிகள் , சுகாதாரப் பணிகள் என அனைத்து விதமான அரசு பணிகளை நகராட்சி நிர்வாகத்தின் மூலம் ஒப்பந்தம் பெற்று அதன் மூலமா பணிகளை செய்து வருகிறார். இந்நிலையில் திருவண்ணாமலை நகராட்சி நிர்வாகத்தின் மூலமாக ஒப்பந்தம் பெற்ற பணியை செய்து முடித்த பின்னரும், அதற்கான ஒப்பந்த தொகையை தனக்கு வழங்கப்படாததால் அதற்கான அதிகாரியை அணுகி முறையிட்டு வந்துள்ளார்.

இதுகுறித்து, சென்ற மாதம் திருவண்ணாமலை நகராட்சி ஆணையாளர் சந்திரா அவர்களை நேரில் சந்தித்து செல்வராஜ் முறையிட்டுள்ளார். அதற்கு ஆணையர் சந்திரா அவர்கள் ” நீங்கள் செய்த பணிக்கான தொகை உங்களுக்கு வழங்குவதற்கு நான் நடவடிக்கை எடுக்கிறேன்” என உறுதி அளித்து அனுப்பி வைத்தார். அதன் பிறகும் அந்த ஒப்பந்த பணிக்கான தொகை தனக்கு கிடைக்காததால், செல்வராஜ் தொடர்ந்து பல நாட்களாக ஆணையாளர் அவர்களை நேரில் சந்தித்து, ” எனக்கு கையெழுத்து போடுங்கள், எனக்கு கையெழுத்து போடுங்கள் ” என முறையிட்டு வந்துள்ளார்.

இந்நிலையில் நேற்று செல்வராஜ் ஆணையாளர் அவர்களை சந்தித்து,
“எனக்கு கையெழுத்து போடுங்கள்” என, தொடர்ந்து தொல்லை கொடுத்துள்ளார் . அதற்கு , ஆணையாளர் ” நீங்கள் பெற்ற ஒப்பந்த பணியை முடிந்ததற்கான கோப்பு என்னுடைய மேசைக்கு வரவில்லை என்னிடம் உங்களுடைய கோப்பு வந்தவுடன் நான் கையெழுத்து போடுகிறேன் என, பலமுறை தெரிவித்துவிட்டேன். விளக்கமாக நான் கூறிய பிறகும் கையெழுத்து போடுங்கள் என தொல்லை செய்து கொண்டிருக்கிறீர்கள், எனது வேலையை செய்ய விடாமல் தொல்லை செய்து கொண்டு இருக்கிறீர்கள்.” என கூறியதுடன்,

” நான் இப்போதே கூட கையெழுத்துப் போட தயார், உங்கள் கையைக் காட்டுங்கள் நான் கையெழுத்துப் போடுகிறேன் ” என சிரித்து கொண்டே செல்வராஜின் கையில் கையெழுத்துப் போட்டு அனுப்பி வைத்திருக்கிறார். ஒப்பந்தக்காரருக்கும் , ஆணையாளருக்கும் நடுவே நடந்த இந்த வசிகர சம்பவம் திருவண்ணாமலை பகுதியில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

செய்தியாளர் – மூர்த்தி
நிழல் . இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed