September 16, 2021

சென்னையில் இருந்து ரயில் மூலம் , ஆந்திராவுக்கு கடத்தப்பட்ட ஒரு டன் ரேஷன் அரிசியை, பொன்னேரி வட்ட வழங்கல் அலுவலர் உமா சங்கரி பறிமுதல் செய்தார்….

1 min read
Spread the love

சென்னை சென்டரலில் இருந்து ஆந்திர மாநிலம் சூளூர்பேட்டைக்கு செல்லும் புறநகர் ரயிகளின் மூலம் ரேஷன் அரிசி கடத்தப்படுவது வழக்கமான ஒரு நிகழ்வாக இருந்து வந்தது. இது குறித்து பொன்னேரி வட்ட வழங்கல் அலுவலர் உமா சங்கரிக்கு ரகசிய தகவல் கிடைத்ததை தொடர்ந்து மீஞ்சூர் ரயில் நிலையத்தில் அவர் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது, சூளூர்பேட்டை மார்கத்தில் சென்ற ரயிலில் ஆய்வு மேற்கொண்ட போது, ரயிலில் பயணிகள் இருக்கைகளின் அடியில் மறைத்து மூட்டை ,மூட்டையாக ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

அந்த ரேசன் அரிசி மூட்டைகளை வட்ட வழங்கல் அலுவலர் உமா சங்கரி பறிமுதல் செய்தார். பின்னர், பறிமுதல் செய்த ஒரு டன் ரேஷன் அரிசியை தச்சூர் கூட்டுரோட்டில் உள்ள நுகர்பொருள் வாணிப கழக கிடங்கிற்க்கு அனுப்பி வைக்கப்பட்டது.

செய்திகள் – பூர்ணவிஷ்வா
நிழல் . இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed