September 26, 2021

திருவண்ணாமலையில் இருந்து வந்தவாசி செல்லும் மார்க்கத்தில் மூன்று மணி நேரத்துக்கும் மேலாக பேருந்து இல்லாததால் ஆத்திரமடைந்த பயணிகள் பேருந்தை சிறைபிடித்து சாலை மறியல்…

1 min read
Spread the love

திருவண்ணாமலை மத்திய பேருந்து நிலையத்திலிருந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு பேருந்துகள் இயக்கப்பட்டு வருவதுடன் அண்டை மாநிலங்களான கர்நாடக தலைநகர் பெங்களூர் மற்றும் ஆந்திரா, புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்களுக்கும் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் திருவண்ணாமலையில் இருந்து மங்கலம் அவலூர்பேட்டை சேத்துப்பட்டு வழியாக வந்தவாசி செல்லும் சாலையில் இரவு 9 மணி முதல் 12 மணி வரை பேருந்துகள் ஏதும் இயக்கப்படாததால் மூன்று மணி நேரத்திற்கும் மேலாக பேருந்து நிலையத்தில் காத்திருந்த பயணிகள் கடும் அவதிக்கு உள்ளாகினர்.

மேலும் இது குறித்து பயணிகள் அரசு போக்குவரத்து துறை அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் அந்த வழியாக மாற்று பேருந்துகள் எதுவும் இயக்க உரிய நடவடிக்கை எடுக்காததால் ஆத்திரமடைந்த பயணிகள் பேருந்து நிலையத்தில் இருந்து வேறு பகுதிகளுக்கு புறப்பட தயாராக இருந்த பேருந்தை சிறைபிடித்து பேருந்தின் முன் அமர்ந்து சாலைமறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

செய்தியாளர் – மூர்த்தி
நிழல் . இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed