September 26, 2021

சென்னையில், கொரோனா தடுப்பூசி முகாமில் பணியாற்றிய மருத்துவ பணியாளர்களுக்கு திமுக தலைமை பொதுக்குழு உறுப்பினர் புழல் நாராயணன் மரியாதை செலுத்தினர்…

1 min read
Spread the love

கொரோனாவின் இரண்டாவது அலையில் தொற்று பரவும் போது தமிழ்நாடு அளவில் சென்னை மாநகராட்சி அதிக அளவில் பெற்று பரவலால் பாதிப்படைந்த நிலையில் மருத்துவ துறையினர் தங்கள் உயிரையும் பொருட்படுத்தாமல் இரவும் பகலும் தீவிரமாக பணியாற்றினர். அதனால் கொரோனாவின் இரண்டாவது அலை கட்டுப்பாட்டிற்குள் வந்தது. இந்நிலையில் கொரோனாவின் மூன்றாவது அலை தீவிரமாக பரவல் இருக்கும் என்ற மத்திய சுகாதாரத்துறை எச்சரிக்கும் நிலையில் தொற்று பரவலை தடுக்கும் விதமாக தமிழக அரசு தீவிரமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.

அதன்படி, தமிழ்நாடு முதல்வர் அவர்களின் ஆலோசனையுடன் கூடிய உத்தரவை ஏற்று, தமிழகம் முழுவதும் கடந்த 12ஆம் தேதி சிறப்பு தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டன. அதேபோல் சென்னை மாநகராட்சி நிர்வாகமும் அனைத்து பகுதியிலும் சிறப்பு முகாம்களை ஏற்பாடு செய்யப்பட்டு பொதுமக்களுக்கு விழிப்புணர்வுடன் தடுப்பூசிகளும் செலுத்தப்பட்டன.

அதில், சென்னை மாநகராட்சி மண்டலம் 2 மணலி 17வது வட்டத்தில் பணிபுரியும் அனைவரும் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக மருத்துவப் பணிகளில் மிகவும் ஈடுபாட்டுடன் செயலாற்றி வருவதுடன் தற்போது நடந்த கொரானோ தடுப்பூசி முகாமிலும் தங்கள் உயிரையும் பணயம் வைத்து எப்போதும் போல் பொதுமக்கள் நலனுக்காக அல்லும் பகலும் அயராது உழைத்துவரும் மருத்துவர், செவிலியர்கள், பணியாளர்கள் என அனைவரையும் இன்று தலைமைப் பொதுக்குழு உறுப்பினர் புழல் எம் நாராயணன் அவர்கள் தலைமையில் சால்வை அணிவித்து பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

நிழல் . இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed