September 26, 2021

மதுரையில் தாலுகா போலிசார் மதுவிலக்கு வழக்குகளில் சம்பந்தப்பட்டு பறிமுதல் செய்யப்பட்ட கார், மோட்டார் சைக்கிள், ஆட்டோ உள்ளிட்ட வாகனங்களை பொது ஏலத்தில் விடப்பட்டது…

1 min read
Spread the love

மதுரை தாலுகா அளவிலான காவல்நிலையத்தில் மதுவிலக்கு சம்பந்தமாக குற்றங்களில் சம்பந்தப்பட்ட இரண்டு சக்கர வாகனங்கள் மற்றும் கார், ஆட்டோ போன்ற வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டு வெகு நாட்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.

அவைகளை மதுரை மாவட்ட ஆட்சியர் அனிஸ் சேகர் அவர்களின் உத்தரவின் பெயரில், மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன் மற்றும் தென் மண்டல மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல் கண்காணிப்பாளர் மகேஸ்வரன் ஆகியோர் முன்னிலையில், பொது ஏலம் மூலமாக விற்பனை செய்யபட்டன . இந்த பொது ஏலத்தின் வாயிலாக 195 இரண்டு மோட்டார் சைக்கிளும், 2 ஆட்டோவும், 6 கார்கள் உள்ளிட்ட வாகனங்கள் சுமார் 40 லட்சத்திற்கும் மேலாக ஏலம் விடப்பட்டது.

முன்னதாக அனைத்து வாகனங்களும் மோட்டார் வாகன பொறியாளர் மற்றும் துறைரீதியான அதிகாரிகளால் ஆய்வு செய்யப்பட்டு ஒவ்வொரு வாகனத்திற்கும் மதிப்பீடு செய்யப்பட்டது. அதேபோல் வாகனங்கள் ஏலம் விடுவது முன்னதாக நாளிதழ்களில் விளம்பரம் செய்யப்பட்டது .

செய்தியாளர் – ஜெகதீஸ்வரி
நிழல் . இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed