October 27, 2021

திருவண்ணாமலை மாவட்ட நிர்வாகம் மழை நீரை சேகரிக்க, ஒரே மாதத்தில் 1,121 பண்ணை குளங்கள் அமைத்து உலக சாதனை …

1 min read
Spread the love

இந்தியாவிலேயே முதன் முறையாக திருவண்ணாமலை மாவட்டத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதியளிப்பு திட்டத்தில் மழை நீர் சேகரிப்பு இயக்கத்தின் மூலம் 30 நாட்களில் பல்வேறு இடங்களில் 1121 பண்ணைக் குளங்கள்
உருவாக்கி உலக சாதனை படைத்தற்கான சான்றிதழ்களை உலக சாதனை நிறுவனங்கள் மாவட்ட ஆட்சித்தலைவரிடம் வழங்கினார்கள்.

நாம் வாழ்கின்ற பூமித்தாய்க்கும், சுற்றுச் சூழலுக்கும் பாதுகாப்பு கொடுக்கும்
நோக்கத்திலும், பசுமை மற்றும் இயற்கையோடு மனித குலம் ஒன்றி வாழ வீணாகும் மழை நீரினை 100% நமக்குத் தேவையான விதத்தில் எவ்வாறு உபயோகிக்கலாம் என்கிற
விழிப்புணர்விற்காகவும் தமிழ்நாடு அரசின் உறுதுணையோடு திருவண்ணாமலை மாவட்ட
நிர்வாகம் மாபெரும் உலகசாதனையைப் படைத்திருக்கின்றது.

திருவண்ணாமலை மாவட்டம் கோடை காலத்தில் மிகுந்த வறட்சி, குடிநீர்
பற்றாக்குறை, உழவின்மை என பல சிக்கல்களை சந்தித்து வருகின்றது. இதற்கு தீர்வு காணும் வகையில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் தொலைநோக்குத்
திட்டத்தின்படி மழை நீரினை தேக்கிவைத்து உபயோகிக்க திருவண்ணாமலை, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை யின் கீழ், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் பணியாளர்களை ஈடுபடுத்தி மாவட்டம் முழுக்க 1,121 பண்ணைக் குளங்களை அமைத்து “30 நாட்களில் பல்வேறு இடங்களில் அதிகமான பண்ணைக்குளங்கள் உருவாக்கிய உலக சாதனை படைத்துள்ளது.

இந்த மகத்தான உலக சாதனையை பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைத்துறை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு, மற்றும், தமிழ்நாடு சட்டபேரவை துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி அவர்களின்
வழிகாட்டுதலின்படி கடந்த 12ம் தேதியன்று திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் பா.முருகேஷ் துவக்கி வைத்தார் ,

மாவட்ட கூடுதல் ஆட்சியர் த.மு.பிரதாப் கண்காணிப்பில் திருவண்ணாமலை மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் உதவியோடு, மாவட்ட முழுக்க தேர்ந்தெடுக்கப்பட்ட 541
பஞ்சாயத்துக்களில், அந்தந்தப் பகுதி விவசாயிகளின் வேளாண் நிலத்தில், அவர்களின் ஒப்புதலோடு 1121 பண்ணை குளங்கள் உருவாக்கப்பட்டுள்ளது. 30 நாட்களில் செப்டம்பர் 10ம் தேதிக்குள் 1,121 பண்ணை குளங்களும் உருவாக்கப்பட்டு அந்தந்த விவசாயிகளின் வசம் தமிழக அரசு ஒப்படைத்துள்ளது.

ஒவ்வொரு பண்ணைக்குளமும் 72 அடி நீளம், 36 அடி அகலம், 5 அடி ஆழம் எனும் அளவில் 3,64,000 லிட்டர் மழைநீரினை தேக்கி வைக்கும் அளவு உருவாக்கப்பட்டுள்ளது. இந்தப் பண்ணைக்குளங்களின் மூலம் 40.69 கோடி லிட்டர் தண்ணீரினை தேக்கி வைக்க
இயலும். மழைக் காலத்தில் வீணாக ஆவியாகும் மழை நீரினை இந்த பண்ணைக் குளங்களில் தேக்கி வைத்தால் குடிதண்ணீர் தேவையில் தன்னிறைவடைந்த பகுதியாக திருவண்ணாமலை மாவட்டம் மாறிவிடும்.

நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்து விவசாயத்திற்கும், விவசாயிகளுக்கும் மிகவும் பயனுள்ளதாக அமையும். இந்தப் பண்ணைக் குட்டை விவசாயத்திற்கு மட்டுமின்றி, விவசாயிகள் விருப்பப்பட்டால், மீன் வளத்துறையின் மூலமாக மீன்கள் வளர்த்து, அதிலும் வருமானம் கிடைக்கும் வண்ணம்
செயல்படுத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது.

இந்திய துணைக் கண்டத்தில் வேறு எந்த மாவட்டமும் செய்திடாத இந்தப் புதிய
முயற்சியை எலைட் வேர்ல்ட் ரெக்கார்ட்ஸ்(USA-LLC) உலக சாதனை நிறுவனத்தின் ஏஷியா
பசிஃபிக் அம்பாஸிடர் கார்த்திகேயன் ஜவஹர் மற்றும் சீனியர் அட்ஜுடிகேட்டர் அமீத்
ஹிங்கரோனி , ஏசியன் ரெக்கார்ட்ஸ் அகாடமி (UAE) நிறுவனத்தின் இந்தியன்
அம்பாஸிடர் .செந்தில்குமார் மற்றும் சீனியர் அட்ஜுடிகேட்டர் சிவக்குமரன் ,

இந்தியா ரெக்கார்ட்ஸ் அகாடமி நிறுவனத்தின் அஸோசியேட் எடிட்டர் ஜெகன்நாதன் மற்றும் ரெக்கார்ட்ஸ் மேனேஜர் கார்த்திக் கனகராஜு
, தமிழன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் நிறுவனத்தின் சீனியர் ரெக்கார்ட்ஸ் மேனேஜர்
பாலசுப்ரமணியன் அவர்களும் நேரில் ஆய்வு செய்து “30 நாட்களில் பல்வேறு இடங்களில்
அதிகமான பண்ணைக்குளங்கள் உருவாக்கிய உலக சாதனைக்கான அங்கீகாரம் வழங்கி அதற்கான உலக சாதனை சான்றிதழ்களை மாவட்ட ஆட்சியர் பா.முருகேஷ் அவர்களிடமும், கூடுதல் ஆட்சியர் .மு.பிரதாப், அவர்களிடமும் வழங்கினார்கள்.

செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட ஆட்சித்தலைவர் பா.முருகேஷ் , மாவட்டத்தில் குறுகிய காலத்தில் 1,121 பண்ணைக்குட்டைகள் அமைத்து உலக சாதனை படைத்துள்ளோம். உலக சாதனைக்கு 800 பண்ணைக்குட்டைகள் போதுமானது ஆனாலும் நமது மாவட்டத்தில் அதிக அளவில் அமைத்துள்ளோம் என்றார்.

செய்தியாளர் – மூர்த்தி
நிழல் . இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed