October 27, 2021

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் திருக்கோயிலில் சனி மகா பிரதோஷத்தை முன்னிட்டு பெரிய நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள்…

1 min read
Spread the love

கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையின் காரணமாக அருணாசலேஸ்வரர் கோயில் மூடப்பட்டதால் பக்தர்கள் இன்றி நடைபெற்ற பிரதோஷம், பஞ்சபூதத் ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்கும் திருவண்ணாமலை அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் திருக்கோயிலில் இன்று புரட்டாசி மாத சனி மகா பிரதோஷத்தை முன்னிட்டு திருக்கோவிலின் ஐந்தாம் பிரகாரத்தில் அமைந்துள்ள பெரிய நந்தி பகவானுக்கு சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது.

கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையின் காரணமாக அருள்மிகு அருணாசலேஸ்வரர் திருக்கோயில் மூடப்பட்டதால் பக்தர்கள் இன்றி பிரதோஷம் நடைபெற்றது.
அருணாச்சலேஸ்வரர் கோவிலில் உள்ள பெரிய நந்தி பகவானுக்கு அரிசி மாவு, மஞ்சள் தூள், தேன், பஞ்சாமிர்தம், பால், தயிர், இளநீர், கரும்புசாறு, எலுமிச்சை சாறு, விபூதி, சந்தனம் உள்ளிட்ட பல்வேறு அபிஷேகப் பொருட்களை கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டது,

பல்வேறு விதமான வண்ண மலர்களால் பூ மாலை அலங்காரம் செய்து சிவாச்சாரியார்கள் வேதமந்திரங்கள் முழங்க தீபாராதனை சிறப்பாக நடைபெற்றது. அருள்மிகு அருணாசலேஸ்வரர் திருக்கோயிலில் தமிழக அரசின் உத்தரவுப்படி கோவிலில் பக்தர்கள் தரிசனத்திற்கு தடை செய்யப்பட்டிருப்பதால் பக்தர்கள் இன்றி பிரதோஷம் நடைபெற்றது.

செய்தியாளர் – மூர்த்தி
நிழல் . இன் 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed