October 27, 2021

தூத்துக்குடி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தாக்கத்தை எதிர்கொள்ள “தூத்துக்குடி தூய்மை திட்டத்தை” மாவட்ட ஆட்சியர் அறிமுகப்படுத்தினார்…

1 min read
Spread the love

தமிழகத்தில் இந்த மாத இறுதியில் இருந்து வடகிழக்கு பருவமழை சீசன் துவங்க உள்ளதால் அந்த சமயங்களில் ஏற்படக்கூடிய புயல் மழை வெள்ள பாதிப்புகளை எதிர்கொள்ள மாவட்ட ஆட்சியர் மரு.கி. செந்தில்ராஜ் அவர்களின் தலைமையில் அதிகாரிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

அதில் பேசிய மாவட்ட ஆட்சியர் அவர்கள் நாம் எதிர்கொள்ள உள்ள வடகிழக்கு பருவமழை காலத்தில் புயல், மழை, வெள்ளம் போன்ற பேரிடர் சமயங்களில் அரசு அதிகாரிகள் மிகவும் தீவிரமாக பணியாற்றிட வேண்டும் என கேட்டுகொண்டார். மேலும், தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் நீர்நிலைகளில் உள்ள செடி, கொடிகள் மற்றும் கரைகளை பலப்படுத்தக்கூடிய பணிகளை செய்வதற்காக தூத்துக்குடி தூய்மை திட்டம் என்ற ஒரு திட்டத்தை மாவட்ட ஆட்சியர் அறிமுகப்படுத்தினார். இத் திட்டத்தின் மூலம் மாவட்டத்திலுள்ள வரத்து கால்வாய்கள், குளங்கள், ஏரி என அனைத்திலும் இருக்கக்கூடிய கருவேல மரங்கள் மற்றும் செடி கொடிகளை அகற்றி நீர் வேகமாக வெளியேறுவதற்க்கு ஏதுவாக அவற்றை அனைத்து செடி, கொடிகளையும் அகற்றிட வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

மேலும், வருவாய்த்துறையினர், தீயணைப்பு துறையினர், மீன்வளத்துறை அதிகாரிகள் மற்றும் மின்வாரிய துறையினர் என அனைத்து துறையினரும் தாலுகா அளவில் பேரிடர் மீட்பு குழு அமைத்து மீட்பு பணிகளை செய்வதற்கு தயாராக இருக்க வேண்டும் எனவும், மாநகராட்சி , பேரூராட்சி, ஊராட்சி நிர்வாகங்கள் தங்கள் பகுதியில் உள்ள புயல் பாதுகாப்பு மையங்களையும், பள்ளிகள் மற்றும் திருமண மண்டபங்களையும் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார். இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் மற்றும் கோட்டாட்சியர்கள் , வட்டாட்சியர்கள் , வட்டார வளர்ச்சி அலுவலர்கள் என அனைத்து துறை அதிகாரிகளும் இந்த ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டனர் .

செய்தியாளர் – ஜெகதீஸ்வரி
நிழல் . இன் – 8939476777

More Stories

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed