October 27, 2021

அத்திப்பட்டு ஊராட்சி சார்பில் கொரோனா தடுப்பு ஊசி செலுத்திய அனைவருக்கும் ₹7 லட்சம் மதிப்பிலான எவர்சில்வர் குடங்களை வழங்கி விழிப்புணர்வு…

1 min read
Spread the love

திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் ஒன்றியம் அத்திப்பட்டு ஊராட்சியில் தடுப்பு ஊசி முகாம் ஊராட்சி மன்றத் தலைவர் சுகந்தி வடிவேலு தலைமையிலும், துணை தலைவர் எம்.டி.ஜி கதிர்வேலு முன்னிலையிலும் நடைபெற்றது.

இந்த முகாமில் தடுப்பூசி போட்டு
கொள்வதின் அவசியத்தை வலியுறுத்தி தடுப்பூசி செலுத்தி கொள்ளும் அனைவருக்கும் எவர்சில்வர் குடம் பரிசாக ஊராட்சி மன்ற தலைவர் சுகந்தி வடிவேலு சார்பில் வழங்கப்பட்டது.

கொரோனாவின் தாக்கத்தை குறைப்பதற்காக அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளில் ஒன்றான தடுப்பூசி செலுத்தி கொள்ளும் திட்டத்தில் திருவள்ளூர் மாவட்ட நிர்வாகம் முனைப்பு காட்டி வருகிறது. ஏற்கனவே 50 ஆயிரம் இலக்கு நிர்ணயிக்கப்பட்டு 58 பேருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன.

கடந்த ஞாயிறன்று 1 லட்சம் இலக்கு நிர்ணயிக்கப்பட்டு 1 லட்சத்து 28 ஆயிரம் பேர்களுக்கு தடுப்பூசிகள் போடப்பட்டன. இந்த நிலையில் இன்று மாவட்டம் முழுவதும் 75 ஆயிரம் இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, தடுப்பூசிகள் போடப்படு வருகின்றன.

இதில் கடந்த முறையும் இந்த முறையும் அத்திப்பட்டு ஊராட்சி நிர்வாகம் அதிக எண்ணிக்கையிலான தடுப்பூசிகளை செலுத்தி அதிக எண்ணிக்கையில் முதலிடம் வகித்து வருகிறது. இந்த நிலையில் தடுப்பூசி செலுத்தி கொள்வதன் அவசியத்தை வலியுறுத்தி அத்திப்பட்டு ஊராட்சி நிர்வாகம் தடுப்பு ஊசி செலுத்தி கொள்ளும் அனைவருக்கும் எவர்சில்வர் குடங்களை பரிசாக வழங்கி வருகின்றது.

அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும், கொரோனா இல்லாத ஊராட்சியாக அத்திப்பட்டு நிர்வாகம் மாற வேண்டும் என்ற குறிக்கோளை அடிப்படையாக வைத்து ₹7 லட்சம் மதிப்பிலான எவர் சில்வர் குடங்கள் வழங்கப்படுவதாக ஊராட்சி மன்ற தலைவர் சுகந்திவடிவேலு தெரிவித்தார்.

நிழல் . இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed