October 27, 2021

பெரியபாளையம் அருகே ஆரணியில் ஸ்ரீ கல்யாண வெங்கடேஸ்வர ஸ்வாமி திருக்கோவில் கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது…

1 min read
Spread the love

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி வட்டம் ஆரணி பேரூராட்சிக்கு உட்பட்ட கோமிட்டிப்பேட்டை பகுதியில் புதிதாக ஸ்ரீ கல்யாண வெங்கடேஸ்வர சுவாமி திருக்கோவில் கட்டி முடிக்கப்பட்டு அதன் நூதன அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் விழா இன்று வெகு விமர்சையாக நடைபெற்றது.

இந் நிகழ்ச்சியை முன்னிட்டு கடந்த 17ம் தேதி அன்று முதல் நாள்தோறும் சிறப்பு யாகசாலை பூஜைகள் நடைபெற்று வந்த நிலையில் இன்று 20ம் தேதி ஞாயிற்றுக்கிழமை ஐயாதிஹோமம், நாடிசந்தானம், மஹா பூர்ணாஹதி, சிறப்பு யாகசாலை பூஜைகள் நடைபெற்றது.

பின்னர் கலச புறப்பாடு மகா சம்ப்ரோக்ஷணம் உள்ளிட்டவை நடைபெற்றது பின்னர் யாக சாலையில் இருந்து கொண்டு வரப்பட்ட புனித நீரை புரோகிதர்கள் தலையில் சுமந்தபடி கோவில் சுற்று மேளதாளங்கள் முழங்க வலம் வந்து பின்னர் ஆலயத்தின் மீதுள்ள கோபுர கலசத்தின் மீது 10.30 மணி அளவில் புனித நீரை ஊற்றி கும்பாபிஷேகம் நடத்தி வைத்தனர்.

இதன் பின்னர் அங்கு வந்திருந்த பக்தர்கள் மீது புனிதநீர் தெளிக்கப்பட்டது இதனை தொடர்ந்து ஆலயத்தில் உள்ள மூலவருக்கு பால், தயிர், சந்தனம், இளநீர் உள்ளிட்ட வாசனை திரவியங்கள் கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்தனர் பின்னர் வண்ண மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது அங்கு வந்திருந்த திரளான பக்தர்களுக்கு அன்னதானம் பிரசாதங்கள் வழங்கப்பட்டது நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கிராம பொதுமக்கள் மிக சிறப்பாக செய்திருந்தனர்.

செய்தியாளர் சீனிவாசன் –
நிழல் . இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed