October 27, 2021

இராஜபாளையத்தில் ஒன்றிய அரசின் அராஜக நிர்வாகத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது…

1 min read
Spread the love

தி.மு.க தலைமையிலான அனைத்து கூட்டணி கட்சிகளின் சார்பில் ஒன்றிய அரசின் அடாவடித்தனமான நிர்வாகத்தை கண்டித்து திமுக கட்சியினர் மற்றும் தோழமை கட்சியினர் அவர்களுடைய வீடுகளில் கருப்புக்கொடி ஏற்றி ஆர்ப்பாட்டம் செய்ய அறிவுறுத்தப்பட்டிருந்தது.

அதன்படி, இராஜபாளையம் தொகுதியில் தொடர்ந்து மக்கள் விரோத மற்றும் ஜனநாயக விரோத ஒன்றிய பா.ஜ.க அரசு மூன்று வேளாண் சட்டங்களை இரத்து செய்ய மறுப்பது, பெட்ரோல் – டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வு தொடருவது, பொருளாதார சீரழிவு, பொதுதுறை நிறுவனங்கள் தனியார் மயமாக்கல், வேலை இல்லாத் திண்டாட்டம், போன்ற செயல்களை கண்டித்தும் ஆர்ப்பாட்டம் செய்யபட்டது.

இராஜபாளையம் நகர் கழக அலுவலகம் முன்பு எஸ்.தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ அவர்களின் தலைமையில் இன்று (20.09.2021) காலை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் தனுஷ் எம். குமார் எம்.பி அவர்கள் கண்டன உரையாற்றினார். இந்த ஆர்பாட்டத்தில் நகர பொறுப்பாளர்கள் ராமமூர்த்தி, மணிகண்டராஜா, பொதுக்குழு உறுப்பினர் கனகராஜ் , மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

செய்தியாளர் – ஜெகதீஸ்வரி
நிழல் . இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed