October 27, 2021

பொன்னேரி அருகே திருப்பாலைவனத்தில், கற்கை நன்று கிராம கல்வி அறக்கட்டளை சார்பில், மாணவ, மாணவிகளுக்கு 3 ம் ஆண்டு கல்விசீர் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது…

1 min read
Spread the love

பொன்னேரி தாலுகா அளவில் பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய நிலையிலுள்ள கிராமப்புற பகுதிகளான பழவேற்காடு, திருப்பாலைவனம், வஞ்சிவாக்கம், பிரளயம்பாக்கம், அவுரிவாக்கம் போன்ற கிராமங்களில் நலிவடைந்த நிலையில் உள்ள மக்கள் அதிகம் வசித்து வருகின்றனர்.

அவர்களுடைய பிள்ளைகளுக்கு
அதே பகுதிகளை சேர்ந்த இளைஞர்கள், வடிவேல், நவீன்குமார், கார்த்திக், அருண்குமார், கிஷோர்குமார், உமாசங்கர், ஆகியோர் ஒன்றினைந்து, “கற்கை நன்று கிராம அறக்கட்டளை” என்ற அமைப்பை உருவாக்கி அதன் மூலம், ஏழை-எளிய மாணவ, மாணவிகளுக்கு தினமும் இரவு நேரம் பாடசாலைகள் நடத்தியும், தேர்வில் அதிக மதிப்பெண் பெறும் மாணவர்களுக்கு பரிசு பொருட்கள் வழங்கியும், சிறப்பாக மதிப்பெண் பெற்று கல்விக் கட்டணம் செலுத்த முடியாமல் அல்லல்படும் ஏழை மாணவ-மாணவிகளுக்கு பள்ளியில் கல்வி கட்டணங்கள் கட்டுவது போன்ற பல உதவிகளை தொடர்ந்து செய்து வருகின்றனர்.

அதன்படி, நேற்று(19-09-2021) வஞ்சிவாக்கம்
கற்கை நன்று கிராமக்கல்வி அறக்கட்டளை சார்பில் 3-ம் ஆண்டு கல்விசீர் வழங்கும் நிகழ்ச்சி திருப்பாலைவனம் சமுதாய கூடத்தில் நடைபெற்றது, அந்நிகழ்ச்சியில் 60 மாணவ, மாணவிகளுக்கு கல்வி ஊக்கத்தொகை மற்றும் கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டது. மேலும் விழாவில் பல சமூக ஆர்வலர்கள் கலந்து கொண்டு கல்வி மற்றும் மனித நேயத்தின் முக்கியத்துவத்தை மாணவர்களுக்கு எடுத்துரைத்தனர்.

அந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளர்களாக ஆதித்தமிழர் விடுதலை இயக்கத்தின் நிர்வாகி இளஞ்செழியன் மற்றும் நிர்மலா இளஞ்செழியன் பொன்னேரி வள்ளலார் அறக்கட்டளை நிர்வாகி ரவி, சமூக ஆர்வலர்
மெதூர் சேகர் மற்றும் பலர் கலந்து கொண்டு மாணவ மாணவிகளுக்கு கல்வி உதவி தொகைகளையும் கல்வி உபகரண பொருட்களையும் வழங்கி வாழ்த்தி பேசினர்.

நிழல் . இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed