October 27, 2021

மீஞ்சூர் காட்டூர் நெடுஞ்சாலையில் இருசக்கர வாகன விபத்தில் சிக்கியவரை பொது மக்கள் காப்பாற்றி மருத்துவமனையில் சேர்த்தனர்…

1 min read
Spread the love

திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர்-காட்டூர் நெடுஞ்சாலையில் கொக்குமேடு அருகே இருசக்கர வாகன விபத்து ஏற்பட்டு உயிருக்கு ஊசலாடிய நபரை பொதுமக்கள் காப்பாற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சுமார் 35 வயது மதிக்கத்தக்க ஆசாமி ஒருவர் இருசக்கர வாகனத்தில் இச்சாலையில் பயணித்துள்ளார்.

திடீரென வாகனம் கட்டுப்பாட்டை இழந்து நிலைதடுமாறி விழுந்ததில் பலத்த காயமுற்று மயக்கமுற்றார். அவ்வழியாக சென்ற பொதுமக்கள் அவரைக் காப்பாற்ற வேண்டி மயக்கமுற்ற நிலையில் ரத்த காயங்களுடன் இருந்த அவரை அமரவைத்து 108 அவசர ஊர்தி போன் செய்து மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

வடநாட்டு ஆசாமி போல் தோன்றும் அந்த நபர் யார் என்ற விவரம் தெரியவில்லை. இருப்பினும் யாரென்றே தெரியாத நபருக்கு கிராமவாசிகள் உதவி செய்யும் இது போன்று மனிதாபிமான செயல்களால் மனித நேயம் நிலைத்திருப்பதை உணரமுடிகிறது என சமூக ஆர்வலர்கள் கூறினர்.

செய்தியாளர் – பூர்ணவிஷ்வா
நிழல் . இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed