October 27, 2021

இராஜபாளையம் செட்டியார்பட்டி பேரூராட்சியில், மழைக் காலத்திற்கு முன்பாக கால்வாய்களை தூர்வாரும் பணியை தங்கபாண்டியன் எம்எல்ஏ துவக்கிவைத்தார்…

1 min read
Spread the love

நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பாக மாபெரும் மழைநீர் வடிகால் தூய்மைப்பணி முகாம் தாமிழ்நாடு முழுவதும் நடைபெற்றுவருகிறது இம்முகாமை இராஜபாளையம் தொகுதி செட்டியார்பட்டி பேரூராட்சி பகுதிகளில் அமைந்துள்ள ஓடையை தூய்மைப்படுத்தும் பணியை நமது மக்கள் எஸ்.தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ அவர்கள் கொடி அசைத்து துவங்கி வைத்தார்.

இந்நிகழ்வில் பேசிய எம்.எல்.ஏ அவர்கள் மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் ஆணைப்படி மழைக்காலங்களில் வீடுகள் பாதிக்கப்படாத வகையில் பேரூராட்சி பகுதிகளில் உள்ள அனைத்து ஓடைகளையும் சுத்தப்படுத்த வேண்டுமென செயல் அலுவலரிடம் கேட்டுக் கொண்டார். இந்நிகழ்வில் செயல் அலுவலர் சந்திரகலா பேரூர் கழக செயலாளர் இளங்கோவன் கலைவானர் சாமுவேல் சகாயம் மற்றும் கழக நிர்வாகிகள், தூய்மைப்பணியாளர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

செய்தியாளர் – ஜெகதீஸ்வரி
நிழல் . இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed