October 27, 2021

எல்லாபுரம் ஒன்றியம்
பாகல்மேடு ஊராட்சியில் தனியார் அறக்கட்டளை சார்பில் 50 தூய்மை பணியாளர்களுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டது…

1 min read
Spread the love

திருவள்ளூர் மாவட்டம் எல்லாபுரம் ஒன்றியம் கன்னிகாபுரம் கிராமத்தில் இயங்கி வரும் சாய் தர்ஷன் அறக்கட்டளை சார்பில் பாகல்மேடு ஊராட்சியில் பணி புரியும் தூய்மை பணியாளர்களுக்கு சாய் தர்ஷன் அறக்கட்டளையின் அறக்கட்டளை தலைவர் சுவாமினி குலிமாயி சாந்த் ம்மாள் அவர்களின் தலைமையில் கொரோனா காலகட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய முன்கள பணியாளர் மற்றும் தூய்மை காவலர்களுக்கு நிவாரண உதவி பொருட்கள் வழங்கப்பட்டது.

அதில், 5 கிலோ அரிசி ஒரு கிலோ சமையல் எண்ணெய் ஒரு கிலோ துவரம் பருப்பு, சர்க்கரை, உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி பாகல்மேடு ஊராட்சியில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் எல்லாபுரம் ஒன்றியத்தில் உள்ள பாலவாக்கம், கல்பட்டு,
எனம்பாக்கம், மாம்பள்ளம் உள்ளிட்ட ஊராட்சியில் பணியாற்றிவரும் 50 தூய்மை பணியாளர்களுக்கு வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளர்களாக பாகல்மேடு ஊராட்சி மன்ற தலைவர் தேவகி தங்க பிரகாசம், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் கனகலட்சுமி சங்கர், வழக்கறிஞர் கோவிந்தராஜன், அறக்கட்டளையின் நிர்வாகிகள் கண்ணன், திவ்யாகண்ணன் ஆகியோர் கலந்துகொண்டு நிவாரண பொருட்களை வழங்கினர்.


இந்நிகழ்ச்சியில் பாகல்மேடு ஊராட்சி துணைத் தலைவர். திருமதி.சரளா ஆதிகேசவன்
ஊராட்சி செயலாளர்கள் உமாபதி, முத்து, தங்கதுரை, ஆகியோர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

செய்தியாளர் – சீனிவாசன்
நிழல் . இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed