October 27, 2021

இராஜபாளையத்தில், எம்.பி மற்றும் எம்.எல்.ஏ தலைமையில், சமுதாய வளைகாப்பு விழா 300 கர்ப்பிணி பெண்களுக்கு நடத்தப்பட்டது…

1 min read
Spread the love

இந்நிகழ்ச்சி குமாரசாமி ராஜா திருமண மண்டபத்தில் எம்.பி தனுஷ் எம்.குமார் அவர்கள் மற்றும் எம்.எல்.ஏ எஸ்.தங்கப்பாண்டியன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இவ்விழாவில் ஒன்றிய சேர்மன் சிங்கராஜ் அவர்கள் வட்டாட்சியர் ராமச்சந்திரன் அவர்கள் காவல்துறை துணை கண்காணிப்பாளர் ராமகிருஷ்ணன் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில் பேசிய எம்.எல்.ஏ அவர்கள், ஒரு கர்ப்பிணி பெண் மனதில் மகிழ்ச்சியோடும் தைரியத்தொடும் இன்பம் துன்பத்தை சமமாக எண்ணக்கூடிய மனநிலையுடன் இருந்தால் தான், சிசுவும் மகிழ்ச்சியோடும் ஆரோக்கியத்துடன் வளரும் எனவும் தற்போது நமது தமிழக முதல்வர் அவர்கள் பெண்களின் முன்னேற்றத்திற்காக பல்வேறு நலதிட்டங்ளை செயல்படுத்தி வருகிறார் .

அதில் குறிப்பாக, நகர பேருந்துகளில் மகளிர்களுக்கு இலவச பயணம், மகளிர் சுய உதவிக்குழுக்கள் மற்றும் பிரசவகால விடுப்பு அதிகரிப்பு போன்ற திட்டங்கள் வரவேற்கத்தக்கது எனவும் மேலும் மகளிர்களுக்கு திமுக அரசு எப்போதும் பாதுகாப்பாகவும் உறுதுணையாகவும் இருக்கும் எனக்கூறினார்.

அதனைத் தொடர்ந்து பேசிய எம்.வி அவர்கள், கர்ப்பிணி பெண்களை அவரவர் கணவன்மார்கள் குடும்பத்தினர் தனிக்கவனம் செலுத்தி பாதுகாத்திட வேண்டுமெனவும் ஒரே நேரத்தில் நூற்றுக்கணக்கான கர்ப்பிணி பெண்களுக்கு வளைகாப்பு செய்ய ஏற்பாடு செய்த தமிழக முதல்வர் அவர்களுக்கு நன்றி தெரிவிப்பதாக கூறினார்.

இந்நிகழ்வில் நகர பொறுப்பாளர்கள் ராமமூர்த்தி , மணிகண்டராஜா பொதுக்குழு உறுப்பினர்கள் கனகராஜ் ஷியாம்ராஜா அவர்கள் ஒன்றிய துணை சேர்மன் துரைகற்பகராஜ் குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர்கள் தங்கலட்சுமி பங்கஞம் மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் சுமதிராமமூர்த்தி மாவட்ட மாணவரணி அமைப்பாளர் வேல்முருகன் மருத்துவர்கள் ஜனனி லாவண்யா மற்றும் பொதுமக்கள் கழகநிர்வாகிகள் மகளிர் அணியினர் அங்கன்வாடி பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

செய்தியாளர் – ஜெகதீஸ்வரி
நிழல் . இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed