October 27, 2021

திருவண்ணாமலையில், தவறான சிகிச்சையால் உயிரிழந்த பெண்ணுக்கு நீதி கேட்டும், மருத்துவரை கைது செய்யக்கோரியும் ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் …

1 min read
Spread the love

திருவண்ணாமலை மாவட்டம் வரகூர் கிராமத்தைச் சேர்ந்த முருகன் மனைவி ராஜகுமாரி(35) என்பவருக்கு கர்பப்பையில் கட்டி ஏற்பட்டதாகவும், அதற்கு சிகிச்சை அளிக்க திருவண்ணாமலை பே.கோபுர தெரு ராஜ் மருத்துவமனையில் செப்டம்பர் 21 அன்று அனுமதித்துள்ளனர்.

அங்கு ராஜகுமாரிக்கு மருத்துவர் அறுவை சிகிச்சை செய்துள்ளார். அப்போது ராஜகுமாரி உயிருக்கு ஆபத்தான நிலை ஏற்பட்ட போது, ராஜ் மருத்துவமனை மருத்துவர் ராஜகுமாரியை அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பி வைத்ததாக கூறப்படுகிறது.

இதையடுத்து, அரசு மருத்துவமனையில் ராஜகுமாரி உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்ட நிலையில், ராஜகுமாரியின் மரணத்திற்கு நீதி கேட்டும், தவறான சிகிச்சை அளித்த மருத்துவரை கைது செய்யக்கோரியும் பெண்ணின் உறவினர்கள் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அலவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு காணப்பட்டது.

செய்தியாளர் – மூர்த்தி
நிழல் . இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed