October 27, 2021

மதுரையில், தென்மண்டல காவல்துறை அதிகாரிகளுக்கு “சைபர் கிரைம்” குறித்த பயிற்சி வகுப்புகள் நடைபெற்றது…

1 min read
Spread the love

தமிழக காவல்துறையில் தென்மண்டல அளவில் உள்ள உயர் அதிகாரிகளுக்கு கணினி மற்றும் சைபர் கிரைம் குறித்த விசாரணைக்கு உதவும் வகையில் பயிற்சி வகுப்புகள் நடத்த தென்மண்டல காவல் துறை தலைவர் அவர்கள் உத்தரவின் பேரில் ஏற்பாடுகள் செய்யப்பட்டது.

இந்தப் பயிற்சி வகுப்பு மதுரை மாவட்ட காவல் அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த பயிற்சி வகுப்பில் தென் மன்னன் மண்டல அளவில் உள்ள மதுரை மாவட்டம், மதுரை மாநகர், தேனி, திண்டுக்கல், விருதுநகர் , சிவகங்கை, இராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த துணை கண்காணிப்பாளர் ஆய்வாளர்கள் மற்றும் பயிற்சி துணை கண்காணிப்பாளர்கள் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர்.

இப்பயிற்சி வகுப்பில் மும்பையை சேர்ந்த தனியார் நிறுவனமான கேத்தான் நிறுவனம் நடத்தியது. அந்நிறுவனத்தில் சார்பில் சிறப்பு பயிற்சியாளர்கள் இப்பயிற்சியை நடத்தினர். அதில் ஆன்ராய்டு போன்கள் மூலம் நூதனமாக பொது மக்களை ஏமாற்றக் கூடிய நபர்களை கண்டறிவது, வேலை வாங்கித் தருவது , வங்கி மோசடி உள்ளிட்ட நூதன குற்றங்களில் ஈடுபடும் நபர்களை துல்லியமாக கண்டறியும் பயிற்சிகள் நடத்தப்பட்டது.

செய்தியாளர் – ஜெகதீஸ்வரி
நிழல் . இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed