October 27, 2021

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயில் பசுக்கள் தொடர்ந்து இறப்பதற்கு காரணமான கோயில் நிர்வாகத்தைக் கண்டித்து , பக்தர்கள் உண்ணாவிரதம் போராட்டம் நடத்த போவதாக அறிவிப்பு…

1 min read
Spread the love

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலிற்க்கு பக்தர்கள் தங்களுடைய வேண்டுதலுக்காக தானமாக வழங்கப்படும் பசுக்கள் சுமார் நாற்பதுக்கும் மேற்பட்ட பசுக்கள் அண்ணாமலையார் கோயில் கோசாலையில் வைத்து பராமரிக்கப்பட்டு வருகின்றன. அந்த பசுக்களுடைய பராமரிப்பிற்கு என தானம் வழங்கியவர்கள் பராமரிப்பு செலவையும் வழங்கப்படுவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், அண்ணாமலையார் கோவிலின் பசுக்கள் சரிவர பராமரிக்கப்படாமல் இருப்பதாக இ தகவல்கள் வந்த வண்ணம் உள்ளன. தற்போது கூட கோசாலையில் ஒரு பசுமாடு மிகவும் கவலைக்கிடமாக உள்ளது. அதை கோவில் நிர்வாகம் சரிவர கவனிக்காமல் இருக்கின்றனர். அதனால் அந்த பசு எழுந்து நிற்க கூட முடியாத நிலையில் தொடர்ந்து பல நாட்களாக தரையில் படுத்த வண்ணமே கிடைக்கின்றது.

இதேபோல சென்ற மார்ச் மாதம் கன்று ஈன்ற பசு ஒன்று இறந்து போனது. அதேபோல் இந்த வாரத்தில் ஒரு பசுமாடு இறந்து போனது, கடந்த சில தினங்களாக இன்னும் ஒரு பசு மாடு கவலைக்கிடமாக உள்ளது. ஆனால் இதை எல்லாம் எல்லாம் கண்டு கொள்ளாமல் கோவில் நிர்வாகம் மிகவும் அலட்சியமாக இருப்பது ஆன்மீக எண்ணம் கொண்ட பக்தர்களுக்கு மிகவும் வருத்தத்தை அளிக்கின்றது.

கோசாலையில் உள்ள பசுக்கள் சரியான பராமரிப்பு இன்றி இப்படி தொடர்ந்து இறந்து வரக்கூடிய சூழ்நிலை கோயிலுக்கு வரக்கூடிய பக்தர்களை மிகவும் கவலையடைய செய்துள்ளது. கோசாலை பொறுப்பாளர்கள் இது குறித்து இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. அங்கு உள்ள பசுக்களுக்கு தீவனம் சரிவர கொடுப்பது கிடையாது. அதனால் பசுக்கள் சரிவர தீவனம் கிடைக்காமல் இறந்து விடுகின்றன. இதை கண்டித்தும் இதை பொதுமக்கள் கவனத்திற்கு எடுத்து செல்லும் விதமாகவும் ராஜகோபுரத்தின் முன்பாக அக்டோபர் 2ம் தேதி ஒருநாள் அடையாள உண்ணாவிரதம் இருக்க போவதாக அம்மா ஆன்மீக பேரவை என்ற ஆன்மீக அமைப்பின் நிர்வாகி ராஜா தெரிவித்துள்ளார்.

செய்தியாளர் – மூர்த்தி
நிழல் . இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed