October 27, 2021

பொன்னேரியில் உள்ள அனைத்து நீதிமன்றங்களுக்கும் அரசு தரப்பு வழக்கறிஞர்கள் நியமனம், மூத்த வழக்கறிஞர்கள் பாராட்டு …

1 min read
Spread the love

திருவள்ளுர் மாவட்டம்
பொன்னேரியில் உள்ள நீதிமன்றங்களுக்கு அரசு தரப்பு வழக்கறிஞர்களாக வழக்கறிஞர்கள் லாசர், முகிலன், தேவேந்திரன், பல்லவன், நித்தியகுமார் ஆகியோர் நியமிக்கப்பட்டனர்.

இவர்களுக்கு பொன்னேரி வழக்கறிஞர் சங்கத்தின் சார்பில் வாழ்த்து நிகழ்ச்சி நடைபெற்றது. பொன்னேரி வழக்கறிஞர்கள் சங்க தலைவர் பன்னீர்செல்வம், செயலாளர் அமரகவி, பொருளாளர் விஜயகுமார், இணைச் செயலாளர்கள் டில்லிபாபு, கணபதி துணை தலைவர்கள் கார்த்தி, பால்சாமுவேல் ஆகியோர் நிகழ்ச்சி ஏற்பாடு செய்தனர்.

மூத்த வழக்கறிஞர்கள் புதிய அரசு தரப்பு வழக்கறிஞர்களுக்கு மாலை அணிவித்து பொன்னாடை போர்த்தி மரியாதை செலுத்தினர். பொன்னேரி வழக்கறிஞர் சங்க உறுப்பினர்கள் மற்றும் வழக்கறிஞர்கள் உடன் இருந்தனர்.

செய்தியாளர் – பூர்ணவிஷ்வா
நிழல் . இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed