October 27, 2021

தூத்துக்குடி மாவட்டத்தில் கனிமொழி எம்.பி அவர்கள் காந்தி சிலைக்கு மாலை அணிவித்தார்…

1 min read
Spread the love

தூத்துக்குடி மாவட்டத்தில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு பழைய மாநகராட்சி அலுவலகத்தில் தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி அவர்கள் மற்றும் மாண்புமிகு சமூக நலன் – மகளிர் உரிமைத் துறை அமைச்சர் பெ. கீதா ஜீவன் ஆகியோர் காந்தியடிகள் அவர்களின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். அப்போது முக்கிய அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் அருகில் இருந்தனர்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி நகராட்சி உ.பசும்பொன் முத்துராமலிங்க தேவர் தினசரி சந்தை நுழைவு வாயிலை , மாண்புமிகு தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி அவர்கள் திறந்து வைத்தார். அப்போது சமூக நலன் – மகளிர் உரிமைத் துறை அமைச்சர் பெ. கீதா ஜீவன் அவர்கள் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் மரு.கி. செந்தில்ராஜ் அவர்கள் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.

செய்தியாளர் – ஜெகதீஸ்வரி
நிழல் . இன் – 8939476777

More Stories

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed