October 27, 2021

பொன்னேரியில் பாதாள சாக்கடைக்காக தோண்டப்பட்ட பள்ளத்தால் விபத்துக்கள் ஏற்படுவதாக கூறி 9-வது வார்டு பகுதி மக்கள் பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர்…

1 min read
Spread the love

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி பேரூராட்சியில் பாதாள சாக்கடை திட்டம் 10 ஆண்டுகளாக செயல்படுத்தப்படாமல், கடந்த 2 ஆண்டுகளாக பணிகள் தொடங்கப்பட்டு ஆங்காங்கே பள்ளங்கள் தோண்டப்பட்டுள்ளன.

9-வது வார்டில் உள்ள தெருக்களில் தோண்டப்பட்ட பள்ளத்தால் அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுவதாகவும், பேரூராட்சி நிர்வாகம் மெத்தனம் காட்டுவதாகவும் கூறி, அப்பகுதி மக்கள் பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

உரிய தீர்வு கிடைக்கும் வரை போராட்டம் நடைபெறும் எனக்கூறி, தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் பொன்னேரி பேரூராட்சி செயல் அலுவலர் வெற்றிஅரசு, பாதாள சாக்கடை திட்ட அதிகாரிகள், போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

உடனடியாக பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய அதிகாரிகள், பள்ளங்களை மூட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், தெருக்களை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியதால், போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.

செய்தியாளர் – பூர்ணவிஷ்வா
நிழல் . இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed