October 27, 2021

மோரை ஊராட்சியில் ஊராட்சி நிர்வாகத்துடன் இணைந்து சங்கர நேத்ராலையா இலவச கண் சிகிச்சை முகாம்…

1 min read
Spread the love

செங்குன்றம் அருகே மோரை ஊராட்சி புதிய கன்னியம்மன் நகர் அங்கன்வாடி மைய வளாகத்தில் சங்கர நேத்ராலயா மருத்துவமனை மற்றும் மோரை ஊராட்சி  சார்பில் இலவச கண் சிகிச்சை முகாம் நடை பெற்றது.

இந்த முகாமிற்கு மோரை ஊராட்சி மன்ற தலைவர் திவாகரன் தலைமை தாங்கி இலவச கண் சிகிச்சை முகாமை துவக்கி வைத்தார். பின்னர் ஒருங்கிணைப்பாளர் முத்துசரவணன் மற்றும் கண் பரிசோதனை வல்லுந‌ர்கள் 100-க்கும் மேற்பட்ட கிராம பொதுமக்களுக்கு கண்புரை, கண்நீர், அழுத்தநீர், குழந்தைகள் கண் நோய், கிட்டப்பார்வை, தூரப்பார்வை, வெள்ளெழுத்து உள்ளிட்ட பரிசோதனைகளை செய்து பின் கண் பாதுகாப்பு குறித்து ஆலோசனைகளை வழங்கினர்.

அத்துடன் கண் அறுவை சிகிச்சைக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளவர்களுக்கு கண் கண்ணாடி இலவசமாக வழங்கப்படும் என தெரிவித்தனர். இதில் ஊராட்சி மன்ற துணை தலைவர் கார்த்திக், வார்டு உறுப்பினர்கள் சரவணன், பாஸ்கர், பாண்டுரங்கன், முருகன், மாலதி, சாந்தி உட்பட கிராம மக்கள் கலந்துகொண்டனர்.

செய்தியாளர் – பரத்குமார்
நிழல் . இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed