October 27, 2021

செங்குன்றம் நகர காங்கிரஸ் கமிட்டியின் புதிய நிர்வாகிகள் அறிமுக ஆலோசனை கூட்டம்…

1 min read
Spread the love

செங்குன்றம் நாரவாரிகுப்பம் பேரூராட்சி சமுதாய நலக்கூடத்தில் திருவள்ளூர் தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டின் செங்குன்றம் நகர புதிய  நிர்வாகிகள் அறிமுக ஆலோசனை கூட்டம் மற்றும் கல்வெட்டு திறப்பு விழா செங்குன்றம் நகர காங்கிரஸ் கமிட்டி தலைவர் கோபி தலைமையில் நடை பெற்றது.

திருவள்ளூர் தெற்கு மாவட்ட தலைவர் ரமேஷ், மாநில நிர்வாகிகள் சாந்தகுமார், அருணாச்சலம், மாவட்ட செயலாளர்கள் கோகுல் வைதீஸ்வரன், மாரியப்பன்  ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக திருவள்ளூர் நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர். ஜெயக்குமார் மற்றும் பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் துரை.சந்திரசேகர் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினர்.

பின்னர் புதிய நிர்வாகிகளுக்கு பொறுப்பு நியமன சான்றிதழ்களை வழங்கினர்.  முன்னதாக செங்குன்றத்தில் மறைந்த காங்கிரஸ் நிர்வாகிகள் நினைவாக கல்வெட்டுகள் திறந்து வைத்தனர். இதில் பொறுப்பாளர்கள் அலிம்புகாரி,  லோகநாதன், குபேந்திரன், ராஜன்பர்ணபாஸ்,  சரவணன், உமர், பிரபாகரன், கணேசன்,  பயாஸ், ராஜிவ்காந்தி, பாஸ்கர்  உள்ளிட்ட  நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

செய்தியாளர் – ப.பாரத்குமார்
நிழல் . இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed