October 27, 2021

பொன்னேரியில் தவறான சிகிச்சையால் 7 வயது சிறுமி உயிரிழந்தாக, உறவினர்கள் தனியார் மருத்துவ மனை மீது தாக்குதல் …

1 min read
Spread the love

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி எம்ஜிஆர் நகரை சேர்ந்தவர் குமார். இவருடைய 7 வயது மகள் லக்‌ஷிதாவுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் கடந்த 27-ம் தேதி பொன்னேரியில் உள்ள நந்தினி மருத்துவ மனையில் சிகிச்சை அளித்ததாக கூறப்படுகிறது.

அதனை தொடர்ந்து வீட்டிற்கு சென்ற உடன், சிறுமியின் உடலில் ஆங்காங்கே ஒவ்வாமை காரணமாக கொப்புளங்கள் ஏற்பட்டதாகவும், மீண்டும் 30-ம் தேதி அதே மருத்துவ மனைக்கு வந்த போது, அவர்கள் சிகிச்சை அளிக்காமல் அரசு மருத்துவ மனைக்கு கொண்டு போக சொல்லி உள்ளனர்,

அதனையடுத்து பாதிப்படைந்த சிறுமி சென்னையில் உள்ள குழந்தைகள் நல மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கபட்டது.

இந் நிலையில் சிறுமி சிகிச்சை பலனிற்றி நேற்று உயிர் இழந்ததாகவும், சிறுமிக்கு அதிகளவு மருந்து செலுத்தியதாலேயே உயிரிழந்ததாக கூறி சிறுமியின் உறவினர்கள் ஏற்கனவே சிகிச்சை அளித்த நந்தினி மருத்துவ மனை மீது கல் வீசி தாக்குதல் நடத்தினர்.

தகவலறிந்து வந்த பொன்னேரி காவல் துறையினர் மருத்துவ மனையின் முன்பு முற்றுகையிட்டு இருந்த சிறுமியின் உறவினர்களை சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

நிழல் . இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed