October 27, 2021

ஊத்துக்கோட்டை அருகே, தனது மகள் காதலித்து மூன்றாவது மனைவியாக திருமணம் செய்து கொண்டதால் தாய், தந்தை தற்கொலை…

1 min read
Spread the love

திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை அடுத்த மாம்பெடு கிராமத்தை சேர்ந்தவர் விவசாயியான தாமரைச்செல்வன் (60) அவருடைய மனைவி சரளா (55) இவர்களின் ஒரே மகளான அர்ச்சனா பல் மருத்துவராக படித்து உள்ளார். அர்ச்சனா தனது பக்கத்து ஊரான அக்கரப்பாக்கம் கிராமத்தை சேர்ந்த கணபதி என்பவரை காதலித்து பெற்றோர் எதிர்ப்பை மீறி அண்மையில் திருமணம் செய்து கொண்டுள்ளார். கணபதி ஏற்கனவே இரண்டு திருமணங்கள் செய்து கொண்டு அவர்களை பிரிந்து தற்போது 3வதாக அர்ச்சனாவை திருமணம் செய்து கொண்டுள்ளார்.

மருத்துவராக்கி அழகு பார்த்த தங்களுடைய ஒரே மகள் 3வது மனைவியாக ஒருவரை திருமணம் செய்து கொண்டதால் தாய், தந்தை இருவரும் மிகுந்த மன உளைச்சலில் இருந்து வந்துள்ளனர். இந்நிலையில் இன்று காலையில் தாமரைச்செல்வன் வயலுக்கு சென்று விட்டு திரும்பி வீட்டிற்க்கு வந்த போது அவருடைய மனைவி சரளா வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதனை கண்ட மருத்துவர் அர்ச்சனாவின் தந்தையும் பூச்சி மருந்து குடித்து அவரும் தற்கொலை செய்து கொண்டார். அக்கம்பக்கத்தினர் இதனை கண்டு ஊத்துக்கோட்டை காவல்துறைக்கு தகவல் கொடுத்தள்ளனர்.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் இருவரது சடலங்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மகள் 3வது மனைவியாக ஒருவரை காதலித்து திருமணம் செய்து கொண்டதால் தாய், தந்தை இருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

செய்தியாளர் – சீனிவாசன்
நிழல் . இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed