October 27, 2021

திருவண்ணாமலையில் சரியான பேருந்து வசதி இல்லாததால் , பஸ்சின் மேற்கூரையில் உயிரை பணயம் வைத்து பயணம் செய்யும் கிராம மக்கள்…

1 min read
Spread the love

திருவண்ணாமலை மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து தினமும் காலை 6 மணிக்கு திருக்கோவிலூருக்கு தனியார் பஸ் இயக்கப்பட்டு வருகிறது. இந் நிலையில் திருக்கோவிலூர் செல்ல 6 மணிக்கு முன்பாக வேறு பஸ்கள் இல்லாததால்,

தினமும் காலை 6 மணிக்கு திருக்கோவிலூருக்கு புறப்பட்டும் தனியார் பஸ்சில் எப்போதும் பயணிகள் கூட்டம் அதிகமாகவே இருப்பது வழக்கம், ஆனால் சில முக்கிய விசேஷ தினங்களில் வழக்கத்தை விட அதிகமாக மக்கள் கூட்டம் அலைமோதுகிறது.

அப்போது பஸ்சுக்குள் இடமில்லாததால் பயணிகள் பலர் தங்கள் உயிரையும் பொருப்படுத்தாமல் பஸ்சின் மேற்கூரையில் ஏறி அமர்ந்து பயணம் செய்கின்றனர். இருந்தாலும், சாலைகள் நடுவே தாழ்வாக செல்லும் மின் கம்பிகளால் தங்களது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுவிடுமோ? என்ற அச்சத்துடன் பயணிகள் பயணம் செய்தனர்.

இதுபோன்ற பயணங்களால் விபத்துக்கள் ஏற்படலாம் என்று பொதுமக்கள் கருதுகின்றனர். எனவே போக்குவரத்து துறை அலுவலர்கள் திருவண்ணாமலை சுற்றுவட்டாரத்தில் எந்தெந்த ஊருக்கு பஸ் வசதிகள் குறைவாக உள்ளது என்பதை ஆய்வு செய்து, தேவையான வழி தடங்களில் அரசு பஸ்களை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அதே , திருவண்ணாமலை மத்திய பேருந்து நிலையம் பகுதியில் உள்ள அனைத்து கழிப்பிடங்களையும் தண்ணீர் விட்டு நகராட்சி ஊழியர்கள் தவறாமல் சுத்தம் செய்து வருவதால் பயணிகள் மகிழ்ச்சியுடன் பாராட்டினர்.

செய்தியாளர் – மூர்த்தி
நிழல் . இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed